பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"இந்தியாவில் விளையாட்டு என்பது ஒரு உணர்வு, இந்தியாவின் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பது உலக அரங்கில் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு ஏற்ப உள்ளது" - ஹர்தீப் எஸ். பூரி

Posted On: 16 AUG 2023 12:36PM by PIB Chennai

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கியுள்ள பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய கீதத்தை மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி நேற்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஹர்தீப் சிங் பூரி, "இந்தியாவில் விளையாட்டு என்பது ஒரு உணர்வு என்றும், இந்தியாவின் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பது உலக அரங்கில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஏற்பதாக உள்ளது என்றும்  கூறினார். விளையாட்டுத் துறையில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல, விளையாட்டு உணர்வும், விளையாட்டுத் திறனும்தான் நாட்டுக்கு உற்சாகத்தைத் தருகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த நன்னாளில், இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட விளையாட்டு கீதம், விளையாட்டு மீதான நாட்டின் ஆர்வத்தை மீண்டும் உற்சாகப்படுத்துகிறது, பாரா தடகளம் உள்ளிட்ட பன்முக விளையாட்டுகளுக்கு உறுதியான ஆதரவு, 'நாடு முதலில், எப்போதும் முதலிடம்' என்ற சாராம்சத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இடம்பெற்று, விரிவான முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு கொள்கையான 'நாடு முதலில், எப்போதும் முதலிடம்’ என்பதைக் குறிக்கும் ஒரு படைப்பு வெளிப்பாடான 'ஜெய ஹே' என்ற ஊக்கமளிக்கும் இசை வீடியோவையும் திரு பூரி வெளியிட்டார்.

இந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுக்காக வைத்திருக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதற்கான, அவர்களின் அசைக்க முடியாத உறுதி மற்றும் அயராத முயற்சியை இந்த வீடியோ அழகாக பதிவு செய்கிறது. இந்த முயற்சி ஒவ்வொரு இந்திய விளையாட்டு வீரரும் தங்கள் இளமைப் பருவத்தில் சிறந்து விளங்க பாடுபடுவதையும், இதுவரை  இல்லாத சாதனைகளை நிகழ்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1949304

***

AD/ANU/IR/RS/GK


(Release ID: 1949327)