பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புப்படை மற்றும் மத்திய ஆயுத காவல் படையில் மறைவுக்கு பிந்தைய 9 வீரர்கள் உள்பட 76 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Posted On: 14 AUG 2023 7:07PM by PIB Chennai

2023 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புப்படை மற்றும் மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த 76 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்க குடியரசுத்தலைவர்  திருமதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இவற்றில் நான்கு கீர்த்தி சக்ரா (மறைவுக்குப் பிந்தைய), 11 சௌர்ய சக்ரா விருது (மறைவுக்குப் பிந்தைய 5 பேர் உள்பட), இரண்டு பேருக்கு இரண்டாம் முறையாக சேனா பதக்கங்கள் (வீரதீர செயல்கள்), 52 சேனா பதக்கங்கள் (வீரதீர செயல்கள்), மூன்று கடற்படை சேனா பதக்கம் (வீரதீரம்) மற்றும் நான்கு விமானப்படை சேனா பதக்கங்கள் (வீரதீரம்) ஆகியவை அடங்கும்.

பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக ராணுவ நாய் மது (இறப்புக்குப் பிந்தைய) மற்றும் விமானப்படை வீரர்களுக்கு ஒரு கடிதம் உட்பட ராணுவத்திற்கு 30 மென்சன் இன் டெஸ்பாட்சஸ் ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆபரேஷன் ரக்க், ஆபரேஷன் பனிச்சிறுத்தை, ஆபரேஷன் கேஷ்வாலிட்டி வெளியேற்றம், ஆபரேஷன் மவுண்ட் சோமோ, ஆபரேஷன் பாங்சாவ் பாஸ், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் ஆர்கிட், ஆபரேஷன் கலிஷாம் பள்ளத்தாக்கு, மீட்பு நடவடிக்கை மற்றும் ஆபரேஷன் வெளியேற்றம் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

***

AD/ANU/IR/RS/KRS


(Release ID: 1948718) Visitor Counter : 189