உள்துறை அமைச்சகம்
2023 சுதந்திர தினத்தையொட்டி தீயணைப்பு சேவை, ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு (சி.டி) பணியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்
Posted On:
14 AUG 2023 3:53PM by PIB Chennai
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தீயணைப்புத் துறை, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு சிறப்புமிக்க சேவைகளுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், வீரதீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், போற்றத்தக்க சேவைகளுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 53 பணியாளர்களுக்கு தீயணைப்பு சேவை பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் மூன்று பணியாளர்களுக்கு வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் தீயணைப்பு சேவை பதக்கமும், வீரதீர செயல்களுக்காக ஒரு பணியாளருக்கு தீயணைப்பு சேவை பதக்கமும் வழங்கப்படுகிறது.
சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் தீயணைப்பு சேவைப் பதக்கம் 8 பணியாளர்களுக்கும், சிறந்த சேவைக்கான தீயணைப்பு சேவைப் பதக்கம் 41 பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும், 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 48 பணியாளர்கள் / தன்னார்வலர்களுக்கு ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு பதக்கம் ஐந்து பேருக்கும் சிறப்பு சேவைக்கான ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு பதக்கம் 43 பேருக்கும் வழங்கப்படுகின்றன.
இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.செல்லமுத்து முருகேசன், உதவி மாவட்ட அலுவலர், திரு. எஸ்.பரமசிவம்பிள்ளை இசக்கி, நிலைய அலுவலர், திரு.எஸ்.அழகர்சாமி தர்மராஜ், முன்னணி தீயணைப்பு வீரர், திரு.சங்கரெட்டி கோவிந்தராஜ், தீயணைப்புப் படைவீரர், திரு.கோபிநாயர் மனமோகன், தீயணைப்புப் படைவீரர் ஆகிய ஐந்து பேர் தீயணைப்பு சேவைக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் பெறுகிறார்கள்.
ஊர்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவில் போற்றத்தக்க செயலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊர்க்காவல் படையின் கம்பெனி கமாண்டர் திரு.தனவேலு டீக்காராம், உதவி பிளாட்டூன் கமாண்டர் திரு. எஸ். மலைச்சாமி ஆகியோர் பெறுகின்றனர்.
***
(Release ID: 1948525)
AP/SMB/AG/KRS
(Release ID: 1948658)
Visitor Counter : 210