ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ரயில்வே சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் உற்சாகமாகவும் ஆர்வத்துடனும் இணைந்தது

Posted On: 14 AUG 2023 4:15PM by PIB Chennai

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டுஇந்திய ரயில்வே 77-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறது. அனைத்து முக்கிய ரயில் நிலையங்கள்ரயில் அலுவலகங்கள்கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவை தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டு மூவர்ண விளக்குகளால் ஒளியூட்டப்படுகின்றன.  ரயில் நிலையங்களின் நிலைய கட்டிடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாலங்கள் தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தேசியக் கொடி யாத்திரை"பிரிவினை நினைவு தினத்தின் கொடூரங்கள்" குறித்த கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரயில் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்டது. இல்லந்தோறும் தேசியக்கொடி நிகழ்ச்சியில் ரயில்வே ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்றனர். ரயில்வே ஊழியர்கள் தங்கள் செல்ஃபி புகைப்படத்தை www.harghartiranga.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

***

 

AP/ANU/IR/RS/GK


(Release ID: 1948565) Visitor Counter : 156


Read this release in: Hindi , Punjabi , English , Urdu