சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (என்.ஐ.எஸ்.டி) பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

Posted On: 14 AUG 2023 2:17PM by PIB Chennai

தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (என்.ஐ.எஸ்.டி) பொதுக் குழுக் கூட்டத்திற்கு மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் ஜி.சி, என்.ஐ.எஸ்.டி தலைவர் திரு சவுரப் கார்க் தலைமை தாங்கினார்.

என்.ஐ.எஸ்.டி.யின் கட்டமைப்பு, செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் நிலையை மதிப்பாய்வு செய்வது கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். கலந்துரையாடலின் முன்னோட்டமாக, என்.ஐ.எஸ்.டி இயக்குநர் என்.ஐ.எஸ்.டி குறித்து ஒரு சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார், மேலும் என்.ஐ.எஸ்.டி பிரிவுகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை ஒரு குறும்படத்தின் மூலம் காட்சிப்படுத்தினார்.

கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆண்டறிக்கை - 2020-2021, 2021-2022, இருப்புநிலை அறிக்கை 2022-23, 2022-23 நிதியாண்டில் பயிற்சித் திட்டங்களின் நிலை, டெல்லி போலீஸ் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மனிதவளத்துடன் ஆராய்ச்சிப் பிரிவை புதுப்பித்தல், 2023-24 ஆம் ஆண்டில் என்ஐஎஸ்டியால் திட்டமிடப்பட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகள், என்ஐஎஸ்டியின் முன்மொழியப்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பு, என்ஐஎஸ்டியின் முன்மொழியப்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பு, என்ஐஎஸ்டியின் ஒளிபரப்பு தளத்தை நிறுவுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு உதவும் பணியாளர் பதவிகளை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக மாநில மற்றும் மத்திய நிறுவனங்களுடன் அதிக ஒத்துழைப்பை வழங்கவும் என்.ஐ.எஸ்.டி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 2022-23 நிதியாண்டில் என்.ஐ.எஸ்.டி.யின் செயல்திறன் திருப்திகரமாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. இறுதியாக, சமூகப் பாதுகாப்புத் துறையில் சிறந்த மையத்தை நோக்கி என்.ஐ.எஸ்.டி வளர வேண்டும் என்று  சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைசெயலாளர் கூறினார்.

***

 

ANU/AP/IR/RS/GK


(Release ID: 1948532) Visitor Counter : 137