மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் 50 பள்ளி ஆசிரியர்கள் 'சிறப்பு விருந்தினர்களாக' பங்கேற்கின்றனர்
प्रविष्टि तिथि:
13 AUG 2023 6:11PM by PIB Chennai
வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெறும் 77வது சுதந்திர தின விழா 2023ல் பங்கேற்க பள்ளி ஆசிரியர்களை சிறப்பு விருந்தினர்களாக கல்வி அமைச்சகம் அழைத்துள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு அழைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வியாளர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த சிறப்பு விருந்தினர்கள் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 15, 2023 வரை திட்டமிடப்பட்ட இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள் மற்றும் அவர்களின் பயணத்திட்டத்தில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தின் சாரத்தை உள்ளடக்கிய நடவடிக்கைகள் அடங்கும். திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
ஆகஸ்ட் 14, 2023: இந்தியா கேட், போர் நினைவுச்சின்னம் மற்றும் பிரதமரின் அருங்காட்சியகத்துக்கு வருகை. கடமைப் பாதையில் நாட்டின் இறையாண்மையை காத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். இந்த மாவீரர்களின் துணிச்சலும், தியாகமும் கலந்து கொண்டவர்களின் நினைவில் நிலைத்து நிற்கும். புது தில்லி தீன் மூர்த்தி மார்க்கில் உள்ள பிரதமரின் அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்வது, தேசத்தின் தலைவிதியை வடிவமைத்த தொலைநோக்குத் தலைவர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் பற்றிய நுண்ணறிவை வழங்கும்.
அதன்பின், புதுதில்லியில் மத்திய இணை அமைச்சர் திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங்குடன் அழைக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் கலந்துரையாடல் அமர்வு நடைபெறும்.
ஆகஸ்ட் 15, 2023: தேசிய கீதத்தின் உற்சாகமான முழக்கத்துக்கு மத்தியில், பிரதமரால் மூவண்ணக் கொடி ஏற்றப்படும் சின்னமான செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் பங்கேற்பு.
சுதந்திர தின விழாவையொட்டி, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது, நாட்டின் எதிர்காலத்தை தங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றிய ஆசிரியர்களின் பங்களிப்பை கவுரவித்து வருகிறது. இளம் தலைமுறையினருக்கு அறிவு, மதிப்புகள் மற்றும் திறன்களை வளர்ப்பதில் அவர்களின் பங்கு விலைமதிப்பற்றது. இந்த சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் நன்றியை வெளிப்படுத்துவதாக இது அமையும்.
**************
ANU/SM/PKV/DL
(रिलीज़ आईडी: 1948380)
आगंतुक पटल : 195