மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் உலகத் தரம் வாய்ந்த சட்டம்: இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
Posted On:
13 AUG 2023 5:47PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் சனிக்கிழமை பெங்களூரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், புத்தொழில் வல்லுனர்கள் மற்றும் முக்கிய குடிமக்களுடன் கலந்துரையாடினார். அமர்வின் போது, வரலாற்று சிறப்புமிக்க தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் பின்னணி குறித்து அவர் விவரித்தார். ஆரம்பத்தில் இருந்து ஒரு சட்டமாக அதன் தற்போதைய நிலை வரை அதன் போக்கை அவர் விளக்கினார். 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது தனியுரிமை என்ற கருத்தாக்கத்தை நாடாளுமன்ற விவாதப் பொருளாக அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கிய அதன் பயணத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
"டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் ஒரு உலகத் தரம் வாய்ந்த சட்டம். ஆகஸ்ட் 15, 2021 அன்று, நமது பிரதமர் திரு நரேந்திர மோடி 'டெக்டேட்' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். இது நாளை தொழிலாளர்களின் ஒரு பகுதியாக இருக்கும் மாணவர்கள், இளம் இந்தியர்களுக்கு தொழில்நுட்ப வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலம் குறித்த அவரது பார்வையை பிரதிபலிக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு நான் எம்.பி.யாக இருந்தபோது, அந்தரங்க தகவல்களை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தனியார் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தேன். துரதிர்ஷ்டவசமாக, அது ஒரு அவசியமான விவாதம் என்று அந்த நேரத்தில் அரசாங்கம் உணரவில்லை. அடிப்படையில் இந்த நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் சுரண்டப்படுகின்றன," என்று அமைச்சர் தனது உரையாடலின் போது கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த ஒரு பரந்த நோக்கத்துடன் இந்த சட்டம் எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பதை திரு ராஜீவ் சந்திரசேகர் விளக்கினார். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியத் தேவைகளுக்கு ஏற்ப சமகால மற்றும் பொருத்தமான சட்டங்களை நிறுவுவதையும், தளக் கடமைகளை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரவிருக்கும் துணை சட்டம் டிஜிட்டல் இந்தியா சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது 22 ஆண்டுகள் பழமையான தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு மாற்றாக இருக்கும். டிஜிட்டல் இந்தியா சட்டம் தொழில்நுட்பத்தின் ஒட்டுமொத்த சூழலியல் அமைப்பையும் கையாளும். இணையத்தைப் பயன்படுத்தும் 830 மில்லியன் இந்தியர்களின் எண்ணிக்கை, 2025-26 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் இந்தியர்களாக உயரும். உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த நாடு இந்தியா . ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்காவிடம் இருந்து எதையும் கடன் வாங்குவதை விட எதிர்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்த எந்தவொரு உரையாடலிலும் நமது சொந்த தரநிலைகளை அமைக்க நாங்கள் தகுதியுடையவர்கள்," என்று அமைச்சர் மேலும் கூறினார்.
குடிமக்களின் தனிப்பட்ட டிஜிட்டல் தரவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டிய அமைச்சர், கணிசமான அபராதங்களை விதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த தண்டனைகள் ஒரு முக்கிய நோக்கத்திற்கு உதவுகின்றன - தொழிற்சாலைகள் மற்றும் தளங்கள் இந்த சட்டத்தைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்கின்றன என்று அவர் கூறினார்.
"இந்த சட்டம் ஒரு புதிய அமைப்புமுறையை உருவாக்குகிறது. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த சட்டத்தை பின்பற்ற ஒரு இடைக்கால மாற்ற கால அவகாசத்தை அனுமதிப்போம். தவறாகப் பயன்படுத்தப்படும் சகாப்தம், சுரண்டலின் சகாப்தம், இந்திய குடிமக்களுக்கு உரிமைகள் இல்லை என்று நம்பும் சகாப்தம் இந்த சட்டத்தின் மூலம் முடிவுக்கு வருகிறது. தனியுரிமை ஒரு அடிப்படை உரிமையாக அறிவிக்கப்படும்போது ஒரு நிறுவனம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குழப்பமான தெளிவற்ற தன்மையை இது அகற்றுவதால், இந்த மசோதா கண்டுபிடிப்பு சூழலியல் அமைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கியமான குறியீடாகும். ஒரு குடிமகனின் தரவு மீறல் ஏற்பட்டால், அவர்கள் வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும், தரவு பாதுகாப்பு வாரியத்திற்கு விவரங்களை வழங்க வேண்டும், மேலும் வாரியம் விசாரணையைத் தொடங்கும், மீறும் தளங்களுக்கு அபராதம் விதிக்கும். தண்டனைகள் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதனால் இது தளங்களை பொறுப்பாக இருக்க ஊக்குவிக்கிறது”என்று ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
"சன்சத் த்வனி" என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு, பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவின் தேசிய தலைவருமான திரு தேஜஸ்வி சூர்யா தலைமையில் ஒரு குடிமக்கள் ஈடுபாடு முயற்சியாகும்.
சனிக்கிழமையன்று, மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அப்பல்லோ மருத்துவமனையில் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் திருமதி ஷாலுமரதா திமக்காவையும் சந்தித்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், கர்நாடகாவில் 8,000-க்கும் மேற்பட்ட மரங்களை நடும் குறிப்பிடத்தக்க பணிக்காக அறியப்படுகிறார்.
**************
ANU/SM/PKV/DL
(Release ID: 1948379)
Visitor Counter : 181