எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நீர் மின் கழகமான என்ஹெச்பிசி, இதுவரை இல்லாத அளவாக இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளது

Posted On: 12 AUG 2023 7:12PM by PIB Chennai

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நீர்மின் நிறுவனமான என்ஹெச்பிசி லிமிடெட், 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவாக, வரிக்கு பிந்தைய  லாபமாக ரூ.1,053 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,050 ஆக இருந்தது.

 

என்ஹெச்பிசியின் வாரியக் கூட்டம் 2023 ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

என்ஹெச்பிசி-யின் மொத்த நிறுவப்பட்ட திறன் அதன் 25 மின் நிலையங்கள் மூலம் 7097.2 மெகாவாட் ஆகும்.

 

**************

ANU/SM/PLM/DL


(Release ID: 1948225) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi , Telugu