பாதுகாப்பு அமைச்சகம்

ஐக்கிய அரபு அமீரக கடற்படையுடன் இருதரப்பு கடல்சார் கூட்டு பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்பு

Posted On: 12 AUG 2023 5:49PM by PIB Chennai

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்படையுடன் இருதரப்பு கடற்படை கடல்சார் கூட்டு பயிற்சியில் பங்கேற்பதற்காக மேற்கு கடற்படையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் வினீத் மெக்கார்டி தலைமையில் இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் மற்றும் ஐ.என்.எஸ் திரிகந்த் ஆகியவை 8 ஆகஸ்ட் 2023 அன்று துபாயின் போர்ட் ரஷீத் சென்றடைந்தன.

 

இரண்டு நாட்கள் விரிவான திட்டமிடலுக்குப் பிறகு, இரு கடற்படைகளும் இன்று இருதரப்பு கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை நடத்தின. இது வலுவான தொழில்முறை பிணைப்புகளை உருவாக்கும் அதே நேரத்தில் சிறந்த நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த பயிற்சிகள் மூலம் இரு கடற்படைகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்.

 

தனது பயணத்தின் போது, ரியர் அட்மிரல் மெக்கார்டி அபுதாபி கடற்படை தளத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்படை படைகளின் துணை தளபதி பிரிகேடியர் அப்துல்லா ஃபர்ஜ் அல் மெஹ்ர்பியை சந்தித்தார். கடற்கொள்ளை, கடத்தல், ஆட்கடத்தல் போன்ற பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்வதற்கும், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் மேதகு திரு. சஞ்சய் சுதீரையும் அட்மிரல் மெக்கார்டி சந்தித்துப் பேசினார்.

 

**************  

ANU/SM/PLM/DL



(Release ID: 1948204) Visitor Counter : 118


Read this release in: English , Urdu , Hindi , Telugu