மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

தேசிய பால் தினத்தை முன்னிட்டு (நவம்பர் 26, 2023) வழங்கப்படும் தேசிய கோபால் ரத்னா விருது -2023- க்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

Posted On: 11 AUG 2023 1:03PM by PIB Chennai

மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய கோபால் ரத்னா விருதுக்கான பரிந்துரைகளை தேசிய விருது இணையப்பக்கமான https://awards.gov.in மூலம் 15.08.2023 முதல் ஆன்லைனில் வரவேற்கிறது. வேட்புமனு / விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 15.09.2023 கடைசி தேதி ஆகும்.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், பால் கூட்டுறவு சங்கங்கள்/ வேளாண் உற்பத்தி அமைப்புகள் (எஃப்.பி.ஓக்கள்) மற்றும் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், இத்துறை 2023  ஆம் ஆண்டில் பின்வரும் பிரிவுகளில் தேசிய கோபால் ரத்னா விருதினை வழங்குகிறது.

தேசிய கோபால் ரத்னாவிருது 2023 என்பது, தகுதிச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் சிறந்த பால் பண்ணையாளர் மற்றும் சிறந்த டி.சி.எஸ் / எஃப்.பி.ஓ / எம்.பி.சி ஆகிய முதல் இரண்டு பிரிவுகளில் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:

முதல் இடத்திற்கு ரூ.5 லட்சம்/-   

2-வது இடத்திற்கு ரூ.3 லட்சம்

3-வது இடத்திற்கு ரூ.2 லட்சம்

சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (ஏஐடி) பிரிவில், மூன்று தரவரிசைகளுக்கும் தகுதிச்சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு மட்டுமே வழங்கப்படும்.

 

தேசிய பால் தினத்தை முன்னிட்டு (26.11.2023) இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. தகுதி மற்றும் பரிந்துரையின் ஆன்லைன் செயல்முறை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, https://awards.gov.in அல்லது https://dahd.nic.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

 ***

ANU/AP/SMB/AG/KPG

 



(Release ID: 1947870) Visitor Counter : 124