புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய உயிரித் திட்டத்தின் கீழ் 6 பயோ சி.என்.ஜி ஆலைகள் மற்றும் 11,100-க்கும் மேற்பட்ட சிறிய உயிரி வாயு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன

Posted On: 11 AUG 2023 10:10AM by PIB Chennai

01.04.2021 முதல் 31.03.2026 வரையிலான காலத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தை (என்பிபி) அறிவித்தது.

ரூ.1715 கோடி நிதி ஒதுக்கீட்டில் இரண்டு கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உயிரி எரிசக்தி ஆலைகளை அமைப்பதற்கு மத்திய நிதி உதவி வழங்கப்படுகிறது.

31.07.2023 நிலவரப்படி, ஆறு பயோ சிஎன்ஜி ஆலைகள் மற்றும் 11,143 சிறிய உயிரி எரிவாயு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. மாநில மற்றும் யூனியன் பிரதேச வாரியான இந்த ஆலைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வரிசை எண்

மாநிலம் / யூனியன் பிரதேசம்

2.11.2022 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் தொடங்கப்பட்ட ஆலைகளின் எண்ணிக்கை

சிறிய உயிரி எரிவாயு ஆலைகளின் எண்ணிக்கை

பயோ சிஎன்ஜி ஆலைகளின் எண்ணிக்கை

1

ஆந்திரப் பிரதேசம்

30

0

2

பீகார்

9

0

3

சத்தீஸ்கர்

118

0

4

கோவா

11

0

5

குஜராத்

224

0

6

ஹரியானா

43

0

7

கர்நாடக

2488

0

8

கேரளா

683

0

9

மத்தியப் பிரதேசம்

2083

0

10

மகாராஷ்டிரா

4167

3

11

ஒடிசா

96

0

12

பஞ்சாப்

835

1

13

ராஜஸ்தான்

20

0

14

தமிழ்நாடு

46

1

15

உத்தரப் பிரதேசம்

126

1

16

உத்தராகண்ட்

164

0

மொத்தம்

11143

6

தேசிய உயிரி எரிசக்தித் திட்டம், உயிரி எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. எரிசக்தி உற்பத்திக்காக, வன அழிப்பு அபாயம் இதில் இல்லை.

இத்தகவலை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் மக்களவையில் 10.08.2023 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

AP/ANU/PLM/RS/GK


(Release ID: 1947736) Visitor Counter : 173