பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கைகள்
Posted On:
09 AUG 2023 4:06PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்குப் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு சட்டவிதிகள்படி தடை உள்ளது. மேலும் எந்தவொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் முந்நூறு அடி சுற்றளவில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய வும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இனைந்து மாநில கல்வித் துறைகள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புகையிலை பயன்பாட்டால் உடல்நலத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொதுசுகாதாரம் என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டதாகும். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் 17.09.2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனுப்பப்பட்டன. மேலும் 18.12.2020, 08.01.2021 மற்றும் 07.07.2020 தேதியிட்ட கடிதங்களில் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளி சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திட்டத்தின் கீழ், புகையிலை, போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்நடத்தப்படுகின்றன. மேலும், நாட்டுப்புற நடனம், சுவரொட்டி தயாரித்தல், ஆக்கபூர்வமான எழுத்து, விவாதம், கலந்துரையாடல் மற்றும் திறன் வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அதனுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வாழ்க்கைத் திறன் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாழ்க்கை திறன்கள் புகையிலை மற்றும் பிற போதைப் பொருட்களைத் தவிர்க்க மாணவர்களுக்கு உதவுகின்றன.
மேலும், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பள்ளி நிர்வாகம், பல்வேறு தரப்பினர் மற்றும் பல்வேறு துறைகளின் பொறுப்பை நிர்ணயிப்பதற்கான விதிகள் இத்துறையால் உருவாக்கப்பட்ட 'பள்ளி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களில்' உள்ளன. இந்த வழிகாட்டுதல்கள் பள்ளி வளாகத்தில் இருந்து 100 கஜங்களுக்குள் புகையிலை அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் தேவையான நடவடிக்கை எடுப்பதில் பள்ளி / பள்ளி நிர்வாகத்தின் பங்கு மற்றும் பொறுப்பு ஆகியவை அடங்கும்.
இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
******
SM/KRS
(Release ID: 1947259)
Visitor Counter : 165