புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் (எம்.பி.எல்.ஏ.டி.எஸ்) செயலாக்க மதிப்பீடு

Posted On: 09 AUG 2023 3:48PM by PIB Chennai

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் (எம்.பி.எல்.ஏ.டி.எஸ்) செயலாக்க மதிப்பீடு

2023 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட எம்.பி.எல்.ஏ.டி.எஸ் வழிகாட்டுதல்களின் கீழ், எம்.பி.எல்.ஏ.டி திட்டத்தில்   மேற்கொள்ளும் பணிகளைத் தேர்ந்தெடுப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.எல்.ஏ.டி.எஸ் வழிகாட்டுதல்கள், 2023-ன் இணைப்பு-8-ல் கொடுக்கப்பட்டுள்ள  பட்டியலில் குறிப்பிடப்படாத பொதுப் பயன்பாட்டுப் பணிகளை வழிகாட்டுதல்களின் அத்தியாயம் -5-ல் கொடுக்கப்பட்டுள்ள திட்டத்தின் செயல்முறை மற்றும் ஒட்டுமொத்த கொள்கைகளுக்கு உட்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைகளின் பேரில் பட்டியலில் சேர்க்கலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை (எம்.பி.எல்.ஏ.டி.எஸ்) செயல்படுத்துவது குறித்த மதிப்பீட்டை அரசு மேற்கொள்கிறது.

01-04-2014 முதல் 31-03-2019 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 216 மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட எம்.பி.எல்.ஏ.டி.எஸ் பணிகள் குறித்த மூன்றாம் தரப்பு மதிப்பீட்டை அமைச்சகம் 2021 ஆம் ஆண்டில் நடத்தியது.

மதிப்பீட்டின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகள், சாத்தியமானவை மற்றும் திட்டத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகின்றன. அவை திருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வழிகாட்டுதல்கள், 2023-ல் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), மத்திய திட்டத்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங்  மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளனர்.

****

 



(Release ID: 1947233) Visitor Counter : 105