நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களால் ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்ட பதினைந்து சுற்றுச்சூழல் பூங்காக்கள்: பல்வேறு மாநிலங்களில் மேலும் 19 சுற்றுச்சூழல் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன
Posted On:
09 AUG 2023 2:10PM by PIB Chennai
நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 15 சுற்றுச்சூழல் பூங்காக்களை நிறுவியுள்ளன. சுற்றுச்சூழல் பூங்காக்களுக்கு அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. சுற்றுச்சூழல் பூங்காக்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றிற்கான செலவினங்கள் அந்தந்த நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகின்றன.
அருகிலுள்ள பகுதிகளின் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக நிலக்கரி / பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களால் சுற்றுச்சூழல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன, மேலும் இந்த சுற்றுச்சூழல் பூங்காக்களிலிருந்து கிடைக்கும் வருவாய் சுரங்கப் பகுதிகளின் மேம்பாட்டிற்கு செலவிடப்படவில்லை. இருப்பினும், சத்தீஷ்கரின் எஸ்.இ.சி.எல்., கெனபாரா சுற்றுச்சூழல் பூங்கா, சுரங்க சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக உள்ளூர் சுய உதவிக் குழுக்களால் பராமரிக்கப்படுகிறது. இந்த சுய உதவிக் குழுக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கெனபாரா சுற்றுச்சூழல் பூங்காவின் மிதக்கும் உணவகம், மீன் வளர்ப்பு மற்றும் படகு சவாரி வசதிகள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் 2020-21ம் ஆண்டில் என்எல்சிஐஎல்-லில் சுரங்கம் ஒன்றில் சுற்றுச்சூழல் பூங்கா 182 நாட்களில் அமைக்கப்பட்டது. இதற்கு 328.21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AD/ANU/IR/RS/KPG
(Release ID: 1947104)
Visitor Counter : 118