எஃகுத்துறை அமைச்சகம்
கனிமங்களின் விநியோகத்தை அதிகரிக்கவும், கோக்கிங் நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு எடுத்த நடவடிக்கைகள்
Posted On:
08 AUG 2023 1:38PM by PIB Chennai
கனிமங்களின் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதில் மேம்பட்ட உற்பத்தியை உறுதி செய்வதற்காக சுரங்கம் மற்றும் கனிமக் கொள்கை சீர்திருத்தங்கள், காலாவதியான குத்தகைகளுடன் சுரங்கங்களை விரைவாக ஏலம் விடுதல் மற்றும் செயல்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், அனைத்து செல்லுபடியாகும் உரிமைகள் மற்றும் ஒப்புதல்களை தடையின்றி மாற்றுதல், சுரங்க செயல்பாடு மற்றும் அனுப்புதல், சுரங்க குத்தகைகளை மாற்றுதல், உற்பத்தி செய்யப்படும் கனிமங்களில் 50% வரை விற்பனை செய்ய தனியார் சுரங்கங்களை அனுமதித்தல், ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
தேசிய எஃகு கொள்கை 2017இல் கணிக்கப்பட்டுள்ள உள்நாட்டு கோக்கிங் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி அமைச்சகம் மிஷன் கோக்கிங் நிலக்கரியை 2022ம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. கோக்கிங் நிலக்கரி இறக்குமதியைக் குறைக்க, எஃகுத் துறையால் கோக்கிங் நிலக்கரி கலப்பு தற்போது 10-12% லிருந்து 30-35% ஆக உயர்த்தப்படும். பிரதமரின் 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் நிலக்கரி அமைச்சகம் எடுத்துள்ள மாற்ற நடவடிக்கைகளால், உள்நாட்டு கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தி 2030 ஆம் ஆண்டில் 140 மெட்ரிக் டன்னை எட்டும், இது சுமார் 48 மெட்ரிக் டன் பயன்படுத்தக்கூடிய கோக்கிங் நிலக்கரியை கழுவிய பின்னர் கிடைக்கும்.
மேலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, உயிரி எரிபொருள்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளைப் பின்பற்றுவது, எரிசக்தி செயல்திறனை அதிகரிப்பது, சுத்திகரிப்பு செயல்முறைகளில் முன்னேற்றம் மற்றும் தேவை மாற்றீடு உள்ளிட்ட ஐந்து உத்திகளை பின்பற்றுவதன் மூலம் எல்.என்.ஜி உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களின் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதற்கான செயல் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.
உள்நாட்டு எஃகு தொழில்துறையின் தற்போதைய தேவை / நுகர்வை பூர்த்தி செய்ய நாட்டில் இரும்பு தாது மற்றும் கோக்கிங் அல்லாத நிலக்கரி போதுமான இருப்பு உள்ளது. இருப்பினும், ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தியாளர்களால் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் தேவையுடன் ஒப்பிடும்போது நாட்டில் உயர்தர நிலக்கரி / கோக்கிங் நிலக்கரி (குறைந்த சாம்பல் நிலக்கரி) விநியோகம் குறைவாக இருப்பதால் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.
இத்தகவலை மத்திய உருக்கு துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1946765)