நிலக்கரி அமைச்சகம்
செயல்பாடுகளில் நீடித்தத் தன்மையை உறுதி செய்ய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பெரிய அளவிலான பன்முகப்படுத்தலை நிலக்கரி அமைச்சகம் ஊக்குவிக்கிறது
Posted On:
07 AUG 2023 11:41AM by PIB Chennai
இந்தியாவின் நிலக்கரித் துறையின் எதிர்காலத்திற்குத் தயாராவதற்காக, நிலக்கரி அமைச்சகம் பொதுத்துறை நிறுவனங்களிடையே பெரிய அளவிலான பன்முகப்படுத்தலை ஊக்குவித்து வருகிறது. இதன்படி, என்.எல்.சி.ஐ.எல்., நிறுவனம், இரண்டு அனல் மின் நிலையங்களை அமைக்க உள்ளது. கான்பூர் அருகே உள்ள கதம்பூரில் ரூ.19,406 கோடி செலவில் 3x660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரு ஆலை அமைக்கப்படுகிறது. என்.எல்.சி.ஐ.எல் மற்றும் உத்தரப்பிரதேச அரசின் கூட்டு முயற்சியாக, இந்த திட்டம் உத்தரப்பிரதேசத்திற்கு 1478.28 மெகாவாட் மற்றும் அசாம் மாநிலத்திற்கு 492.72 மெகாவாட் மின்சாரம் வழங்கும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஆலையின் முதல் கட்ட மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒடிசாவின் தலாபிராவில் 3X800 மெகாவாட் பிட்ஹெட் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்களை என்.எல்.சி.ஐ.எல் வகுத்துள்ளது. தமிழகத்திற்கு 1450 மெகாவாட், புதுச்சேரிக்கு 100 மெகாவாட், கேரளாவுக்கு 400 மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்கு மொத்தம் ரூ.19,422 கோடி செலவாகும். இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கி 2028-29 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிலக்கரி நிறுவனம் (சி.ஐ.எல்) இரண்டு அனல் மின் நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒன்று, மத்தியப் பிரதேச அரசுடன் கூட்டு முயற்சியாக அமர்கண்டக் அருகே அமைந்துள்ளது. ரூ.5,600 கோடி மதிப்பீட்டில் 1,660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும்.
***
ANU/AP/IR/RR
(Release ID: 1946335)
Visitor Counter : 142