குடியரசுத் தலைவர் செயலகம்

நூலகங்கள் ஒரு நாட்டின் அறிவின் அடையாளமாகத் திகழ்கின்றன: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

Posted On: 05 AUG 2023 6:49PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று நூலகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். நூலகங்களின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிப்பதற்கும் வாசிப்பு கலாச்சாரத்தை அதிகரிப்பதற்கும் கலாச்சார அமைச்சகத்தால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நூலகங்களின் வளர்ச்சியானது, சமூகம் மற்றும் கலாசார வளர்ச்சியுடன் தொடர்புடையது என குறிப்பிட்டார். கலாசாரம் மற்றும் நாகரிகங்களின் முன்னேற்றத்தின் அளவீடாகவும் நூலகங்கள் விளங்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.  எனவே தான் படையெடுப்புகளின் போது நூலகங்களை அழிக்க வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளர்கள் கருதிய குறிப்புகள் வரலாற்றில் உள்ளன என்று அவர் கூறினார். நூலகங்கள் ஒரு நாடு அல்லது சமூகத்தின் கூட்டு உணர்வு மற்றும் அறிவின் அடையாளமாகக் கருதப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அரிய வகை நூல்கள்  மற்றும் ஓலைச்சுவடித் தகவல்களை புதுப்பித்து வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். நாகரிகங்களுக்கு இடையேயான பாலமாக நூலகங்கள் செயல்படுகின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். பழங்கால மற்றும் இடைக்காலங்களில், பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியாவில் இருந்து புத்தகங்களை எடுத்துச் சென்று, அவற்றை மொழிபெயர்த்து அறிவைப் பெற்றதாக அவர் தெரிவித்தார். புத்தகங்களில் நிலத்தின் நறுமணமும், வானத்தின் பரந்த தன்மையும் இருப்பதாக குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரம், சட்டம் மற்றும் நீதித்துறை  இணை அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மற்றும் கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி ஆகியோரும் மத்திய கலாச்சாரத் துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

விழாவின் 2-ம் நாளான நாளை நடைபெறும் நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் கலந்து கொள்கிறார்.

***

SM/PLM/KRS

 

(Release ID: 1946047)



(Release ID: 1946134) Visitor Counter : 113


Read this release in: English , Urdu , Hindi , Punjabi