சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்

Posted On: 05 AUG 2023 5:30PM by PIB Chennai

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் உலகளாவிய தென்பகுதி நாடுகளின் பிரச்சினைகளை எடுத்துரைக்க ஒரு தனித்துவமான தளத்தை வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தில் இன்று (05.08.2023) காணொலிக் காட்சி வாயிலாக திரு மன்சுக்  மாண்டவியா  உரையாற்றினார்.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான தென்னாப்பிரிக்காவின் முன்முயற்சிகளை மத்திய சுகாதார அமைச்சர் பாராட்டினார். தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் முன்முயற்சி இந்தியாவின் ஜி 20 முன்னுரிமைகளுடன் இணைந்த வகையில் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்

ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடைமுறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் முன்முயற்சியை இந்தியா ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஏனெனில் இது எதிர்கால சுகாதார நெருக்கடிகளுக்கான தயார்நிலையை அதிகரிக்கும் என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார். எல்லை தாண்டிய நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்த ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அணுசக்தி மருத்துவத்தில் பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் முன்முயற்சியையும் அமைச்சர் வரவேற்றார்

பிரிக்ஸ் காசநோய் ஆராய்ச்சி கட்டமைப்புக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு உண்டு என அவர்  தெரிவித்தார்இது 2030 க்குள் காசநோயை ஒழிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் என்று கூறினார்.

***********

(Release ID – 1946049)

 

SM/PLM/KRS



(Release ID: 1946105) Visitor Counter : 114