அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலகின் விருப்பமான செலவு குறைந்த சுகாதார இடமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
05 AUG 2023 4:57PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகின் விருப்பமான செலவு குறைந்த சுகாதார இடமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறினார். நோய்த்தடுப்பு சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா ஏற்கனவே முன்னிலை வகிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஜம்முவின் கன்வென்ஷன் சென்டரில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஏற்பாடு செய்த இந்திய ஓட்டோரினோலரிங்காலஜி தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை அகாடமியின் வருடாந்திர மாநாட்டைத் தொடங்கி வைத்து டாக்டர் ஜிதேந்திர சிங் இவ்வாறு கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் இதுவரை உலகின் மிகச் சிறந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும் என்றும், அதை உருவாக்கிய பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஏற்கனவே இருக்கும் ஒரு நோய்க்கு கூட காப்பீடு பெறுவதற்கான விருப்பத்தை வழங்கும் உலகின் ஒரே சுகாதார காப்பீட்டுத் திட்டம் இதுவாகும், எடுத்துக்காட்டாக, இன்று ஒரு நபருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதன் பிறகு அவர் சென்று காப்பீட்டுக்கு பதிவு செய்துகொண்டு சிகிச்சைக்கான நிதி உதவியைப் பெறலாம், இது வளர்ந்த நாடுகளில் கூட எங்கும் காணப்படவில்லை, டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் கொண்டு வருவதன் மூலம், சுகாதார சேவை வழங்கலின் துறைசார் மற்றும் பிரிவு அணுகுமுறையிலிருந்து விரிவான தேவை அடிப்படையிலான சுகாதார சேவைக்கு இந்தியா நகர்ந்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா செலவு குறைந்த மருத்துவ சிகிச்சைக்கான இடமாக மாறியுள்ளது, மேலும் 2014 ஆம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து கொண்டு வந்த பல முன்னோடி சுகாதார சீர்திருத்தங்கள் மற்றும் சாத்தியமான ஏற்பாடுகள் காரணமாக இது சாத்தியமானது. முன்பு இந்தியா எந்தவொரு தடுப்பு சுகாதாரத்திற்கும் பெயர் பெற்றது இல்லை, ஆனால் இன்று டி.என்.ஏ கோவிட் தடுப்பூசி, உலகின் முதல் நாசி வழி கோவிட் தடுப்பு மருந்து, இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான "செர்வாவாக்" மற்றும் பல்வேறு நோய்களுக்கான பல தடுப்பூசிகளை உற்பத்தி செய்ததன் மூலம் இந்தியா உலகின் தடுப்பூசி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.
இந்த அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை சுகாதாரத்திற்கு உள்ளது, வெறும் 145 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து, இந்த எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது, 16 எய்ம்ஸ், நூற்றுக்கணக்கான டயாலிசிஸ் மையங்கள் போன்றவை தற்போது இயங்கி வருகின்றன. ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல், விண்வெளி தொழில்நுட்பம், சமீபத்தில் சந்திரயான் -3 ஏவப்பட்டது, குவாண்டம் தொழில்நுட்பம் போன்றவற்றில் இந்தியா ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.
ஐ.ஏ.ஓ.எச்.என்.எஸ் தலைவர் (சேர்மன்) பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன், ஐ.ஏ.ஓ.எச்.என்.எஸ் தலைவர் (பிரசிடெண்ட்) டாக்டர் மதன் காப்ரே, ஐ.ஓ.ஏ.எச்.என்.எஸ் இயக்குநர் டாக்டர் பி.விஜயகிருஷ்ணன், ஐ.ஓ.ஏ.எச்.என்.எஸ் அமைப்பு தலைவர் டாக்டர் சுனில் கோட்வால், ஐ.ஓ.ஏ.எச்.என்.எஸ் அமைப்பு செயலாளர் டாக்டர் ரோஹன் குப்தா, டாக்டர் ஐ.பி.சிங் மற்றும் டாக்டர் ஆர்.எஸ்.ஆனந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
***
SM/PKV/DL
(Release ID: 1946066)
Visitor Counter : 165