மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை ஐஐடி ஏற்பாடு செய்துள்ள 'டிஜிட்டல் இந்தியா ஆர்ஐஎஸ்சி-வி' கருத்தரங்கில் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்கிறார்.

Posted On: 05 AUG 2023 12:23PM by PIB Chennai

சென்னை ஐஐடி மற்றும் ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் 'டிஜிட்டல் இந்தியா ஆர்ஐஎஸ்சி-வி' கருத்தரங்கில் மத்திய தொழில் முனைவோர், திறன் மேம்பாடு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்கிறார்.

 

'ஆர்.ஐ.எஸ்.சி-வி பாதை வாயிலாக இந்தியாவில் மின்னணுவியலின் எதிர்காலம்' என்பதைக் காட்டும் இந்த நிகழ்வில் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் ஆர்.ஐ.எஸ்.சி-வி சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய நுண்ணறிவுகளைப் பெற ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்வார்கள்.

 

ராஜீவ் சந்திரசேகர், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

 

இந்தக் கருத்தரங்கில் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களின் நுண்ணறிவு தொழில்நுட்ப சொற்பொழிவுகள், உள்நாட்டு ஆர்.ஐ.எஸ்.சி-வி செயலிகளை வெளிப்படுத்தும் அரங்குகள்,  ஹேக்கத்தான் மற்றும் சிறப்பு முதலீட்டாளர் அமர்வு ஆகியவை இடம்பெறும்.

 

ஆர்.ஐ.எஸ்.சி-வி பற்றி

 

'ஆர்.ஐ.எஸ்.சி' என்பது 'குறைவான உத்தரவுகளுடன் கூடிய கணினி அமைப்பு' மற்றும் 'வி' என்பது ஐந்தாவது தலைமுறையைக் குறிக்கிறது. ஆர்.ஐ.எஸ்.சி-வி திட்டம் 2010 இல் தொடங்கியது. ஆர்.ஐ.எஸ்.சி-வி ஐ.எஸ்.ஏ திறந்த நிலை ஒத்துழைப்பு மூலம் செயலி கண்டுபிடிப்புகளின் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும்,  கட்டிடக்கலையில் ஒரு புதிய அளவிலான இலவச, விரிவாக்கக்கூடிய மென்பொருள் மற்றும் வன்பொருள் சுதந்திரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அடுத்த 50 ஆண்டு கணினி வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஆர்.ஐ.எஸ்.சி-வி ஐ.எஸ்.ஏவை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் முதல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நுண்செயலியான 'சக்தி'யை பேராசிரியர் காமகோடி உருவாக்கினார்.

 

ஆர்.ஐ.எஸ்.சி-வி அறக்கட்டளை 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதை நிறுவியதில்,  ஐ.ஐ.டி மெட்ராஸ் -ம் ஒன்றாகும். டி.ஐ.ஆர்-வி (டிஜிட்டல் இந்தியா ஆர்.ஐ.எஸ்.சி-வி) நுண்செயலி திட்டம் 2022 ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது, இது இந்தியாவில், உலகில் எதிர்காலத்திற்கான நுண்செயலிகளை உருவாக்கவும், டிசம்பர் 2023 க்குள் தொழில்துறை தர சிலிக்கான் மற்றும் வடிவமைப்பு வெற்றிகளை அடையவும் உதவும் ஒட்டுமொத்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

 

ஆர்.ஐ.எஸ்.சி-வி ஐ.எஸ்.ஏ அடிப்படையிலான வடிவமைப்புகள் பல நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களால் பயன்படுத்தப்படுகின்றன. RISC V ISA வெளிப்படையான,  இலவசமான ஆதாரமாகும்.  கல்வியாளர்களைப் பொறுத்தவரை, ஆர்.ஐ.எஸ்.சி-வி ஐ.எஸ்.ஏவின் கற்பித்தல் பல அற்புதமான ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளுடன் தொழில் தொடர்பான பாடத்திட்டத்துக்கு வழிவகுக்கிறது.

***

SM/PKV/DL


(Release ID: 1946015) Visitor Counter : 167