சுரங்கங்கள் அமைச்சகம்

கடலோர கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா - 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Posted On: 03 AUG 2023 5:45PM by PIB Chennai

கடலோரப் பகுதிகள் கனிம (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா - 2023 மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 01.08.2023 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

கடல் பகுதிகளில் செயல்பாட்டு உரிமைகளை ஒதுக்கீடு செய்வதற்கு ஏல நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெரிய சீர்திருத்தத்துக்கு இது வழிவகுக்கும்.

இந்த திருத்தச் சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

•        இச்சட்டத்தின் கீழ் தனியாருக்கு இரண்டு வகையான செயல்பாட்டு உரிமைகள் போட்டி ஏலத்தின் மூலம் வழங்கப்படும்.

•        இச்சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு உரிமமானது ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக வழங்கப்பட்ட இரண்டு கட்ட செயல்பாட்டு உரிமையாகும்.

•        மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட கனிம வளப் பகுதிகளில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு செயல்பாட்டு உரிமைகள் வழங்கப்படும்.

•        அணுசக்தி கனிமங்கள் விஷயத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்பாட்டு உரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

****

SM/PLM/KRS



(Release ID: 1945631) Visitor Counter : 125