மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்பது (ஸ்டடி இன் இந்தியா - எஸ்ஐஐ) தொடர்பான இணையதளத்தைப் புதுதில்லியில் மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திரு எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்

Posted On: 03 AUG 2023 4:28PM by PIB Chennai

கல்வியின் உலகளாவிய மையமாக இந்தியாவை மீண்டும் மாற்றுவதற்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இன்று புதுதில்லியில் ஸ்டடி இன் இந்தியா என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தனர். கல்வித் துறை இணையமைச்சர்கள் டாக்டர் சுபாஸ் சர்க்கார், திருமதி அன்னபூர்ணா தேவி. திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் மூத்த அதிகாரிகளும் 10 க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில், இந்தியாவில் படித்து வரும் ரஷ்யா, தாய்லாந்து, ஜப்பான், எத்தியோப்பியா, ஈக்வடார், கஜகஸ்தான் மற்றும் கொரிய குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.

 

ஸ்டடி இன் இந்தியா இணையதளம் என்பது இந்திய உயர் கல்வி நிறுவனங்கள்) பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் ஒரு பிரத்யேக இணையதளமாகும். இளங்கலை (யுஜி), முதுகலை (பிஜி), முனைவர் பாடத்திட்டங்கள், யோகா, ஆயுர்வேதம், பாரம்பரிய கலைகள் போன்ற பல படிப்புகளை கல்வித் திட்டங்கள் குறித்த தகவல்களை இந்த தளம் வழங்கும். புதிய இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் அல்லது படிப்புகளில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய இணையதளம் மாணவர் பதிவு மற்றும் விசா விண்ணப்ப செயல்முறைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த அம்சங்களை வழங்கும்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திரப் பிரதான், புவிசார் அரசியல் எல்லைகளைக் கடந்த கல்வியை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். உலகெங்கிலும் உள்ள மாணவர்களிடையே உயர்கல்விக்கான விருப்பத் தேர்வு இடமாக இந்தியாவை மாற்றுவதில் ஸ்டடி இன் இந்தியா இணையதளம் ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று திரு தர்மேந்திரப் பிரதான் மேலும் கூறினார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மாணவர்களை வரவேற்றுக் கல்வி அளிப்பதன் மூலம் இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்றும் அரசின் உறுதிப்பாட்டை இந்த தளம் எடுத்துரைக்கிறது என்று கூறினார். இந்தியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் கல்வித் தேடல்களை இந்த தளம் எளிமையாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

 

ஸ்டடி இன் இந்தியா திட்டம் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி வாய்ப்புகளை விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விண்ணப்ப செயல்முறையை வழங்குகிறது. பதிவு முதல் விசா ஒப்புதல் வரை, இந்தத் தளம் முழு பயணத்தையும் எளிதாக்குகிறது.

 

************

ANU/AD/PLM/KRS        



(Release ID: 1945620) Visitor Counter : 122