விண்வெளித்துறை

சந்திரயான் - 3 திட்டத்தின் நிலை

Posted On: 03 AUG 2023 5:10PM by PIB Chennai

சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் நோக்கில் தொடர்ச்சியான சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் பூமி செல்லும் பாதை மற்றும் சந்திர எல்லைப் பாதை என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த விண்கலம் தற்போது பூமி சுற்றும் பாதையில் உள்ளது.

சந்திரயான்-3 கூறுகளில் நேவிகேஷன் சென்சார்கள், உந்துவிசை அமைப்புகள், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை உறுதி செய்வதற்கான பல்வேறு மின்னணு மற்றும் இயந்திர துணை அமைப்புகள் அடங்கும். கூடுதலாக, ரோவரை தரையிறக்குவதற்கான வழிமுறைகள், இருவழி தகவல் தொடர்பு தொடர்பான ஆண்டெனாக்கள் மற்றும் பிற ஆன்போர்டு எலக்ட்ரானிக்ஸ் உள்ளன.

சந்திரயான் - 3 வு வாகனத்தின் எடை கிட்டத்தட்ட 3896 கிலோ ஆகும், லேண்டர் மற்றும் ரோவரின் மிஷன் ஆயுட்காலம் தோராயமாக ஒரு சந்திர நாள் ஆகும், இது 14 பூமி நாட்களுக்கு சமம். லேண்டருக்கான திட்டமிடப்பட்ட தரையிறங்கும் இடம் - 690எஸ், தென் துருவம் ஆகும்.

 

சந்திரயான் -3 இன் நோக்கங்கள்:

  1. பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கம்
  2. நிலவின் மேற்பரப்பில் ரோவர் ஆய்வு
  3. உள்ளக அறிவியல் பரிசோதனைகள்.

இத்தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****

 

ANU/SM/IR/KPG/GK



(Release ID: 1945561) Visitor Counter : 246