புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக சமுத்திரயான் திட்டத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் 6 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மூன்று பணியாளர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2023 2:00PM by PIB Chennai

சமுத்திரயான் திட்டத்தில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு மூன்று பணியாளர்களை அனுப்பி, ஆழ்கடல் வளங்கள் ஆய்வு மற்றும், பல்லுயிர் மதிப்பீடு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுளளது. வளங்களை ஆராய்வதற்காக பயன்படுத்தப்படுவதால் நீர்மூழ்கிக் கப்பல் இந்த திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்காது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான அம்தங்களைக் கொண்ட அரசின் நீலப் பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப ஆழ்கடல் இயக்கம் அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட வாழ்வாதாரங்கள், வேலைவாய்ப்புகள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு ரிஜிஜு அவைக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945355   

***


(வெளியீட்டு அடையாள எண்: 1945545) வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu