புவி அறிவியல் அமைச்சகம்
இந்தியத் துணைக்கண்டத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
प्रविष्टि तिथि:
02 AUG 2023 4:17PM by PIB Chennai
புவி அறிவியல் அமைச்சகம் 2020 ஆம் ஆண்டில் 'இந்திய பிராந்தியத்தில் பருவநிலை மாற்றத்தின் மதிப்பீடு' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது இந்தியத் துணைக்கண்டத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த விரிவான ஆய்வைக் கொண்டதாக அமைந்துள்ளது. அறிக்கையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
- இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1901-2018 காலகட்டத்தில் சுமார் 0.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
- 1950-2015 ஆம் ஆண்டுகளில் தினசரி மழைவீழ்ச்சி சதவீத அதிகரித்துள்ளது.
- 1951-2015 காலகட்டத்தில் இந்தியாவில் வறட்சி கணிசமாக அதிகரித்துள்ளது.
- கடந்த 25 ஆண்டுகளில் (1993-2017) வட இந்தியப் பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு ஆண்டுக்கு 3.3 மில்லி மீட்டர் என்ற விகிதத்தில் ஏற்பட்டுள்ளது.
- 1998-2018 காலகட்டத்தில் பருவமழைக்கு பிந்தைய காலங்களில் அரபிக்கடலில் கடுமையான புயல்கள் அதிகரித்துள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் பருவ நிலையை வழக்கமாக கண்காணித்து வருடாந்திர சுருக்க வெளியீட்டை வெளியிட்டு வருவதுடன், மாதாந்திர சுருக்கத்தையும் வெளியிடுகிறது. வருடாந்த பருவநிலை சுருக்கத்தில் சம்பந்தப்பட்ட காலத்தில் ஏற்படும் வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் அடங்கியிருக்கும்.
இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
---------
AP/ANU/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1945188)
आगंतुक पटल : 216