சுரங்கங்கள் அமைச்சகம்

சட்டவிரோத சுரங்கத் தொழிலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

Posted On: 02 AUG 2023 2:22PM by PIB Chennai

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்படி சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டுதல் மற்றும் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்களை சேமித்தல் போன்றவற்றை தடுப்பதற்கான விதிகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கங்களைத் தடுக்க இதுவரை 21 மாநில அரசுகள் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்கியுள்ளன.

எந்தவொரு சட்டவிரோத சுரங்க நடவடிக்கையையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்குத் தெரிவிக்க விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக சுரங்க கண்காணிப்பு அமைப்பை (எம்.எஸ்.எஸ்) இந்திய சுரங்க அமைப்பு மூலம் சுரங்க அமைச்சகம் உருவாக்கியுள்ளது. பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் புவி தகவலியல் நிறுவனம் (பி.ஐ.எஸ்.ஏ.ஜி- என்) வழங்கிய வரிசை செயற்கைக்கோள் படத் தரவை எம்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறது.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

---------

AP/ANU/PLM/RS/KPG



(Release ID: 1945012) Visitor Counter : 132