எஃகுத்துறை அமைச்சகம்
ஜூலை 2023 வரையிலான காலகட்டத்தில் என்எம்டிசி சாதனை அளவாக அதிக உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது
Posted On:
02 AUG 2023 12:43PM by PIB Chennai
எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா சுரங்க நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (என்எம்டிசி) ஜூலை 2023 வரையிலான காலக்கட்டத்தில் சாதனை அளவாக அதிக உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது. இந்த தேசிய சுரங்க நிறுவனம் இதுவரை 2024-ம் நிதியாண்டில் சாதனை செயல்திறனை வழங்கியுள்ளதுடன் 100 மில்லியன் டன் சுரங்க உற்பத்தி நிறுவனமாக மாறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. என்எம்டிசி தொடர்ந்து இரண்டு நிதியாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியான 40 மில்லியன் டன்னை முறியடிக்கும் நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்நிறுவனம் ஜூலை 2023 வரை 13.15 மில்லியன் டன் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்து 14.18 மில்லியன் டன் இரும்புத் தாதுவை விற்பனை செய்துள்ளது, இது உற்பத்தி மற்றும் விற்பனையில் முறையே 20 சதவீதம் மற்றும் 33.5 சதவீதம் வளர்ச்சி ஆகும். ஜூலை மாதத்தில் மட்டும், 2.44 மில்லியன் டன் இரும்புத்தாது உற்பத்தி செய்து, 3.03 மில்லியன் டன் இரும்புத் தாதுவை விற்பனை செய்து,உற்பத்தி மற்றும் விற்பனையில் முறையே 19 சதவீதம் மற்றும் 2.7 சதவீதம் மாதாந்திர வளர்ச்சியை எட்டியுள்ளது.
***
ANU/AD/PLM/RS/KPG
(Release ID: 1945010)
Visitor Counter : 129