பாதுகாப்பு அமைச்சகம்

எம்.என்.எஸ் கூடுதல் தலைமை செயலராக மேஜர் ஜெனரல் அமிதா ராணி பொறுப்பேற்பு

Posted On: 01 AUG 2023 4:45PM by PIB Chennai

மேஜர் ஜெனரல் அமிதா ராணி 01 ஆகஸ்ட் 2023 அன்று ராணுவ செவிலியர் பணியின்  (எம்.என்.எஸ்) கூடுதல் தலைமை இயக்குநராக  நியமிக்கப்பட்டார். தில்லியின் இராணுவ மருத்துவமனையின் (ஆர் & ஆர்) நர்சிங் கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர்தற்போதைய நியமனத்தை ஏற்பதற்கு முன்பு, ராணுவ மருத்துவமனையின் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) முதன்மை மேட்ரன் பதவியை வகித்தார்.

 

புதிய அதிகாரி 1983 ஆம் ஆண்டில் ராணுவ தாதியர் சேவையில் நியமிக்கப்பட்டார். தரக் கட்டுப்பாடு, நோய்த்தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மேலாண்மை, சுகாதாரப் பராமரிப்பில் சிக்ஸ் சிக்மா கிரீன் பெல்ட் போன்றவற்றில் குறுகிய கால படிப்புகளையும், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட தேசிய சுகாதாரப் பராமரிப்பு அகாடமியில் மருத்துவமனை மற்றும் தர மேலாண்மையில் முதுகலை சான்றிதழ் படிப்பையும் முடித்துள்ளார். ஒரு திறமையான நிர்வாகியாக, கொல்கத்தா டிபிஎம் சிஹெச் (இசி), 154 ஜிஹெச், எம்ஹெச் ஜலந்தர், எம்ஹெச் அலகாபாத் மற்றும் பெங்களூரு விமானப்படை கமாண்ட் மருத்துவமனை கியவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.

****

ANU/AP/PKV/KRS



(Release ID: 1944848) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Hindi , Punjabi