மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த பிரிவு அலுவலர்கள்/ சுருக்கெழுத்தாளர்கள் (கிரேடு-'பி' / கிரேடு-'ஐ') வரையறுக்கப்பட்ட துறைப் போட்டித் தேர்வு, 2018
Posted On:
01 AUG 2023 12:30PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 மார்ச் மாதம் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அலுவலர்கள்/ சுருக்கெழுத்தாளர்களின் (கிரேடு-பி'/ கிரேடு-1) வரையறுக்கப்பட்ட துறைப் போட்டித் தேர்வு, 2018 –ல் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பிரிவு வாரியான பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், முடிவு திருத்தத்திற்கு உட்பட்டது.
அறிவிக்கப்பட்ட முடிவு , இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எஸ்.எல்.பி எண் 30621/2011 மற்றும் 31288/2017 ஆகியவற்றின் இறுதி முடிவுக்கு உட்பட்டது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது வளாகத்தில் தேர்வுக்கூடக் கட்டடம் அருகே 'வசதி மையம்' ஒன்றைக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரிலோ அல்லது (011)- 23385271 / 23381125 / 23098543 தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ இந்த கவுண்டரிலிருந்து தங்கள் முடிவுகள் குறித்த ஏதேனும் தகவல் / விளக்கத்தைப் பெறலாம். தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி இணையதளத்திலும் அதாவதுwww.upsc.gov.in கிடைக்கும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
***
ANU/PKV/GK
(Release ID: 1944803)
Visitor Counter : 147