வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களுக்கு போக்குவரத்து இணைப்பு மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு

Posted On: 31 JUL 2023 4:14PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களில் இணைப்பை வலுப்படுத்த பின்வரும் ரயில், விமானம் மற்றும் சாலை திட்டங்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

ரயில் இணைப்பு:

ரூ. 81,941 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1909 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் 19 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயலாக்கத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவற்றில், 482 கிலோ மீட்டர் துாரப் பணிகளுக்கு, 2023 மார்ச் வரை, 37 ஆயிரத்து 713 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

விமான இணைப்பு:

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 21.10.2016 அன்று மண்டல இணைப்புத் திட்டம் என்ற உடான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வடகிழக்குப் பகுதியில் உடான் திட்டத்தின் கீழ் ரூப்சி, தேசு, தேஜ்பூர், பசிகாட், ஜோர்ஹாட், லிலாபரி, ஷில்லாங், பாக்யாங், இட்டாநகர் மற்றும் திமாபூர் ஆகிய 64 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. வடகிழக்குப் பகுதியில் 2014 ஆம் ஆண்டில் ஒன்பது விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தன. தற்போது வடகிழக்குப் பகுதியில் 16 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சாலைப் போக்குவரத்து இணைப்பு:

வடகிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாநில பொதுப்பணித் துறைகள் மூலம் ரூ. 1,02,594 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 261 சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சகம், முந்தைய வடகிழக்கு சாலைத் துறை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தற்போதைய வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மொத்தம் 77 சாலைத் திட்டங்களுக்கு ரூ. 3372.58 கோடி ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், வடகிழக்குப் பிராந்தியத்தில் ரயில், விமானம் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்துவது தொடர்பாக வடகிழக்கு கவுன்சிலின் கீழ் ரூ. 4345.16 கோடி மதிப்பிலான 51 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்படுகிறது. தேவையான அனுமதிகள் சம்பந்தப்பட்ட முகமைகளால் சட்டப்படி பெறப்படுகிறது.

இத்தகவலை மத்திய வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

********

ANU/PLM/KPG

 


(Release ID: 1944418) Visitor Counter : 116


Read this release in: English , Urdu , Manipuri , Assamese