வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற தூய்மை இந்தியா இரண்டாம் கட்ட இயக்கத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல்

Posted On: 31 JUL 2023 2:03PM by PIB Chennai

நகரங்களில் சுகாதாரம் மற்றும் கழிவுகள் மேலாண்மையின் ஒட்டுமொத்த செயலாக்கத்தை மதிப்பிடுவதற்காக, மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் 'ஸ்வச் சர்வேக்ஷன் என்ற வருடாந்திர ஆய்வை நடத்துகிறது. அத்துடன், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகரங்கள் மற்றும் குப்பையில்லா நகரங்கள் (ஜி.எஃப்.சி) சான்றிதழ்களும் முகமைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல், மாநாடுகள், காணொலிக் கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றின் மூலம் அவ்வப்போது இந்த இயக்கத்தின் பணிகள் தொடர்பாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

இரண்டாம் கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் அக்டோபர் 1, 2021 அன்று முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு தொடங்கப்பட்டது. இது குப்பைகளைப் பிரித்தல், வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தல் மற்றும் அறிவியல் பூர்வமாக பாதுகாப்பாக குப்பைகளை அகற்றுவது உட்பட அனைத்து வகையான செயல்பாடுகளின் மூலம் அனைத்து நகரங்களும் குப்பையில்லா நிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரின் அதிகபட்ச மறுபயன்பாட்டையும் உறுதி செய்வதற்காக, ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கான பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையின் ஒரு புதிய அம்சமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து பாரம்பரிய குப்பைக் கிடங்குகளையும் சரிசெய்து அவற்றை பசுமை மண்டலங்களாக மாற்றுவதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டாம் கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கழிவுகளிலிருந்து உரம், கழிவுகளிலிருந்து எரிசக்தி, பாரம்பரிய கழிவுக் கிடங்குகளை சரிசெய்தல், திடக்கழிவு மேலாண்மை ஆலைகளை நிறுவுதல் போன்றவற்றுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கெளஷல் கிஷோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1944255    

***

ANU/PLM/AG


(Release ID: 1944271) Visitor Counter : 134