வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2023 நிறைவேற்றியது
இந்த மசோதா வாழ்வதை எளிதாக்குவதற்கும் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கும் மேலும் ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
இந்த மசோதா 19 அமைச்சகங்கள்/துறைகளால் நிர்வகிக்கப்படும் 42 மத்தியச் சட்டங்களில் 183 விதிகளைத் திருத்துவதற்கு முன்மொழிகிறது
Posted On:
27 JUL 2023 7:12PM by PIB Chennai
ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2023 இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மக்களவையில் 22 டிசம்பர் 2022 அன்று முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2022 மீதான கூட்டுக் குழு, நாடாளுமன்ற துறை மற்றும் சட்ட விவகாரத் துறை, அனைத்து 19 அமைச்சகங்கள் /துறைகளுடன் விரிவான விவாதங்களை நடத்தியது. இந்த குழுவானது 09.01.2023 மற்றும் 17.02.2023-க்கு இடையே 9 தொடர் அமர்வுகளின் மூலம் மசோதாவின் உட்பிரிவின் உட்பிரிவு மீது ஆய்வு நடத்தியது. இறுதியாக 13.03.2023 அன்று நடைபெற்ற அமர்வில் குழு அதன் அறிக்கையை ஏற்றுக்கொண்டது.
இந்த குழுவின் அறிக்கையானது மாநிலங்களவை மற்றும் மக்களவையில் முறையே 17 மார்ச் 2023 மற்றும் 20 மார்ச் 2023 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இக்குழு மசோதாவில் மேலும் சில திருத்தங்களை பரிந்துரைத்தது. மேலும், 7 பொதுவான பரிந்துரைகளையும் வழங்கியது. இதில் 6 பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள் / துறைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2023 மூலம், 19 அமைச்சகங்கள்/துறைகளால் நிர்வகிக்கப்படும் 42 மத்தியச் சட்டங்களில் மொத்தம் 183 விதிகள் குற்றமற்றதாக்க முன்மொழியப்பட்டுள்ளன. பின்வரும் முறைகளில் குற்றமற்றதாக்க முன்மொழியப்பட்டது: -
(i) சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் ஆகிய இரண்டும் சில விதிகளில் நீக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
(ii) சில விதிகளில் சிறைத்தண்டனை நீக்கப்பட்டு அபராதம் மட்டும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
(iii) சில விதிகளில் சிறைத்தண்டனை நீக்கப்பட்டு அபராதத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
(iv) சில விதிகளில் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டையும் தண்டனையாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.
(v) சில விதிகளில் குற்றங்களை சேர்க்கும் முறையை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
மேற்கூறியவற்றை திறம்பட அமல்படுத்துவதற்கு, (ஏ) செய்யப்பட்ட குற்றத்திற்கு ஏற்றவாறு அபராதம் மற்றும் தண்டனைகளை நடைமுறை ரீதியாக திருத்துவது (பி) தீர்ப்பளிக்கும் அதிகாரிகளை நியமித்தல்; (சி) மேல்முறையீட்டு அதிகாரிகளை நியமித்தல்; மற்றும் (டி) அபராதம் மற்றும் தண்டனைகளின் எண்ணிக்கையை அவ்வப்போது அதிகரித்தல், போன்ற நடவடிக்கைகளை மசோதா முன்மொழிகிறது;
தண்டனையின் காலமும் தன்மையும் குற்றத்தின் தீவிரத்திற்கு ஏற்றதாக இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
திருத்த மசோதாவின் நன்மைகள் பின்வருமாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன:
இந்த திருத்த மசோதா குற்றவியல் விதிகளை நியாயப்படுத்தவும், குடிமக்கள், வணிகங்கள் மற்றும் அரசு துறைகள் சிறிய, தொழில்நுட்ப அல்லது நடைமுறை தவறுகளுக்கு சிறைத்தண்டனைக்கு பயப்படாமல் செயல்படுவதை உறுதிப்படுத்தவும் பங்களிக்கும்.
செய்த குற்றத்தின் தண்டனை விளைவுகளின் தன்மை, குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இந்த மசோதா செய்த குற்றத்தின் / மீறலின் தீவிரத்தன்மை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தண்டனையின் தீவிரத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை நிறுவுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சட்டத்தின் கடினத்தன்மையை இழக்காமல், வணிகங்கள் மற்றும் குடிமக்கள் சட்டத்தை பின்பற்றுவதை உறுதி செய்கின்றன.
தொழில்நுட்ப/செயல்முறை குறைபாடுகள் மற்றும் சிறிய தவறுகளுக்கு பரிந்துரைக்கப்படும் குற்றவியல் விளைவுகள், நீதி வழங்கல் முறையை அடைத்து, கடுமையான குற்றங்களின் தீர்ப்பை பின் பர்னர் மீது வைக்கிறது. மசோதாவில் முன்மொழியப்பட்ட சில திருத்தங்கள், பொருந்தக்கூடிய மற்றும் சாத்தியமான இடங்களில் பொருத்தமான நிர்வாகத் தீர்ப்பளிக்கும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதாகும். இது நீதி அமைப்பில் உள்ள தேவையற்ற அழுத்தங்களைக் குறைப்பதற்கும், வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் குறைப்பதற்கும், மேலும் திறமையான மற்றும் பயனுள்ள நீதி வழங்கலுக்கு உதவும்.
குடிமக்கள் மற்றும் சில குறிப்பிட்ட வகை அரசு ஊழியர்களைப் பாதிக்கும் விதிகளை குற்றமற்றவர்களாக்குவது சிறிய மீறல்களுக்கு சிறைத்தண்டனை பயமின்றி வாழ உதவும்.
இந்த சட்டத்தை இயற்றுவது, சட்டங்களை பகுத்தறிவுபடுத்துதல், தடைகளை நீக்குதல் மற்றும் வணிகங்களின் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் பயணத்தில் ஒரு அடையாளமாக இருக்கும். இந்த சட்டம் பல்வேறு சட்டங்களில் எதிர்கால திருத்தங்களுக்கு வழிகாட்டும் கோட்பாடாக செயல்படும். ஒரு பொதுவான நோக்கத்துடன் பல்வேறு சட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தங்கள் அரசாங்கத்திற்கும் வணிகத்திற்கும் சமமாக நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.
அமைச்சகம்/துறை வாரியான 42 சட்டங்களின் பட்டியல்
(ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2023-ன் கீழ் உள்ளடக்கப்பட்டது)
வரிசவரிசை எண்.
|
மசோதாவின் பெயர்
|
அமைச்சகங்கள் / துறைகளின் பெயர்
|
1
|
வேளாண் உற்பத்தி (தரப்படுத்துதல் மற்றும் குறியிடுதல்) சட்டம், 1937
|
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறை
|
2
|
கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டம், 1972
|
வர்த்தகத் துறை
|
3
|
ரப்பர் சட்டம், 1947
|
4
|
தேயிலை சட்டம், 1953
|
5
|
மசாலா வாரிய சட்டம், 1986
|
6
|
சட்டமுறை அளவியல் சட்டம், 2009
|
நுகர்வோர் துறை
|
7
|
கண்டோன்மென்ட் சட்டம் 2006
|
பாதுகாப்புத் துறை
|
8
|
அரசாங்கப் பத்திரங்கள் சட்டம், 2006
|
பொருளாதார விவகாரங்களுக்கான துறை
|
9
|
உயர் மதிப்புடைய வங்கி நோட்டுகள் (பணமதிப்பு நீக்கம்) சட்டம், 1978
|
10
|
பொதுக் கடன் சட்டம், 1944
|
11
|
ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், பலன்கள் மற்றும் சேவைகளின் இலக்கு விநியோகம்) சட்டம், 2016
|
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம்
|
12
|
தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000
|
13
|
13. காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981
|
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
|
14
|
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986
|
15
|
இந்திய வனச் சட்டம், 1927
|
16
|
பொதுப் பொறுப்புக் காப்பீட்டுச் சட்டம், 1991
|
17
|
வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனச் சட்டம் 1961
|
நிதி சேவைகள் துறை
|
18
|
காரணி ஒழுங்குமுறை சட்டம், 2011
|
19
|
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுச் சட்டம் 1981
|
20
|
தேசிய வீட்டுவசதி வங்கி சட்டம், 1987
|
21
|
பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007
|
22
|
உணவுக் கழகங்கள் சட்டம், 1964
|
உணவு மற்றும் பொது விநியோகம் துறை
|
23
|
கிடங்கு நிறுவனங்கள் சட்டம், 1962
|
24
|
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940
|
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை
|
25
|
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006
|
26
|
மருந்தியல் சட்டம், 1948
|
27
|
மெட்ரோ இரயில்வே (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002
|
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்அ அமைச்சகம்
|
28
|
பத்திரிகை மற்றும் புத்தக பதிவு சட்டம் 1867
|
தகவல் & ஒளிபரப்பு துறை அமைச்சகம்
|
29
|
ஒளிப்பதிவு சட்டம், 1952
|
30
|
கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1995
|
31
|
வணிகக் கப்பல் சட்டம், 1958
|
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
|
32
|
இந்திய அஞ்சல் அலுவலகச் சட்டம், 1898
|
அஞ்சல் துறை
|
33
|
கொதிகலன்கள் சட்டம், 1923
|
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை
|
34
|
பதிப்புரிமைச் சட்டம், 1957
|
35
|
புவிசார் குறியீடுகள் சட்டம், 1999
|
36
|
தொழில்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1951
|
37
|
காப்புரிமைச் சட்டம், 1970
|
38
|
வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999
|
39
|
ரயில்வே சட்டம், 1989
|
ரயில்வே அமைச்சகம்
|
40
|
மோட்டார் வாகனச் சட்டம், 1988
|
சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகம்
|
41
|
பணமோசடி தடுப்புச் சட்டம், 2002
|
வருவாய் துறை
|
42
|
புள்ளியியல் சேகரிப்பு சட்டம், 2008
|
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
|
***
AP/ASD/DL
(Release ID: 1943999)
Visitor Counter : 293