இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம்


இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் முதன்முறையாக நடத்தப்படும் ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளுதூக்குதல் போட்டிகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்

Posted On: 27 JUL 2023 8:17PM by PIB Chennai

இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தர் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக நடைபெறும் ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளுதூக்குதல் போட்டிகள் 2023-ஐ மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் ஜூலை 27 அன்று தொடங்கி வைத்தார்.

இந்த சர்வதேச போட்டியில் 30-க்கும் மேற்பட்ட இந்திய பளுதூக்குதல் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், கடந்த மாதத்தில் மட்டும் தங்களின் சிறந்த செயல்திறனின் மூலம், காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் மொத்தம் 61 பதக்கங்களை இந்தியாவுக்கு வென்று கொடுத்த பல கேலோ இந்தியா தடகள வீரர்கள் பங்கேற்கின்றனர். 

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய திரு. தாக்கூர் "ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நாடுகள், 200 விளையாட்டு வீரர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்கும் இந்த சிறப்புமிக்க போட்டியை இந்தியா நடத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற போட்டிகள் எதிர்கால விளையாட்டு வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைகின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தைப் பாராட்டிய திரு. தாக்கூர், "இந்த குறுகிய காலத்திற்குள் இந்தளவு பெரிய போட்டியை நடத்துவது எளிதல்ல என்பதை அறிவேன். ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை சஹ்தேவ் யாதவ் தலைமையிலான பளுதூக்குதல் கூட்டமைப்பு நிரூபித்துள்ளது" என்றார்.

இளம் வீரர்களை அதிக வலிமையுடன் போட்டியிட ஊக்குவிக்கும் கர்ணம் மல்லேஸ்வரி, மீராபாய் சானு போன்ற பல்வேறு புகழ்பெற்ற இந்திய பளுதூக்குதல் வீரர்களின் சாதனைகள் குறித்தும் அமைச்சர் பேசினார். கடந்த காலங்களில் பல கேலோ இந்தியா விளையாட்டுப் பதக்கங்கள் மற்றும் உயர் மட்டத்தில் பிற பதக்கங்களை வென்ற மார்ட்டினா தேவி, ஹர்ஷதா கருட் மற்றும் தனுஷ் லோகநாதன் போன்ற புதிய விளையாட்டு வீரர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி முடிவடைகிறது.

***

LK/AM/RJ



(Release ID: 1943760) Visitor Counter : 97