நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஓய்வூதிய திட்ட அறக்கட்டளையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் துவக்கம்

Posted On: 28 JUL 2023 2:38PM by PIB Chennai

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தலைவர் டாக்டர். தீபக் மொஹந்தி, தேசிய ஓய்வூதிய திட்ட அறக்கட்டளையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். 

https://npstrust.org.in என்ற இந்த புதிய இணையதளமானது, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும். அத்துடன் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் அடல் பென்ஷன் திட்டம் (APY) தொடர்பான தகவல்களையும் வழங்கும். 

இந்தப் புதிய இணையதளம் கணிணி மற்றும் மொபைல் சாதனங்களுக்கு உகந்ததாக ஒரு நேர்த்தியான மற்றும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மக்களின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்ய புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. 
 
தேசிய ஓய்வூதிய திட்ட அறக்கட்டளை அதன் சேவைகள் மற்றும் டிஜிட்டல் முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இதன் மூலம் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது

*****

 

(Release ID: 1943685) Visitor Counter : 175