குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கார்கில் வெற்றி தினத்தின் 24-ம் ஆண்டு தினத்தையொட்டி மாநிலங்களவையில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது
प्रविष्टि तिथि:
26 JUL 2023 2:47PM by PIB Chennai
கார்கில் வெற்றி தினத்தின் 24-ம் ஆண்டு நிறைவையொட்டி, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கர், நமது துணிச்சலான வீரர்களின் உன்னதமான தியாகத்திற்கு இன்று மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து குடியரசுத் துணை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடினமான நிலப்பரப்பு மற்றும் மிகவும் மோசமான வானிலை சூழலை வென்று, இறுதியில் எதிரிகளை தோற்கடிப்பதில் முன்மாதிரியான வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களின் அசைக்க முடியாத துணிச்சலையும், வீரத்தையும் பாராட்டினார். வீரமரணம் அடைந்த வீரர்களின் குறிப்பிடத்தக்க தியாகத்தை அங்கீகரித்த குடியரசுத் துணைத் தலைவர் , அனைத்து முயற்சிகளிலும் இந்தியாவை முன்னணியில் வைத்திருக்க அனைத்து குடிமக்களும் தங்களை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
முப்படை வீரர்களுக்கு தமது வணக்கங்களை தெரிவித்த திரு தன்கர், அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
தியாகிகளுக்கு நன்றி தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும், வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக அவையில் மவுன அஞ்சலி செலுத்தினர்.
***
ANU/IR/KPG
(रिलीज़ आईडी: 1942824)
आगंतुक पटल : 178