குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவரின் செயலகம்
குடியரசுத் தலைவர் ஜூலை 25 முதல் 27 வரை ஒடிசா பயணம்
प्रविष्टि तिथि:
24 JUL 2023 7:53PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, 2023, ஜூலை 25 முதல் 27 வரை ஒடிசாவுக்கு பயணம் செல்ல இருக்கிறார் .
அடூத்-பந்தன் குடும்பத்தால் ஆதரவு அளிக்கப்படும் மருத்துவ மாணவர்கள் குழுவுடன் 2023, ஜூலை 25-ம் தேதி மாலையில் கலந்துரையாடும் குடியரசுத் தலைவர், புவனேஸ்வரில் உள்ள ஒடிசா ராஜ்பவனின் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஜூலை 26, 2023 கட்டாக்கில் நடைபெறும் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். அதே நாளில், கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஆண்டு விழாவில் உரையாற்றுகிறார். பிறகு கட்டாக்கில் உள்ள ஒடிசாவின் தேசிய சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
ஜூலை 27, 2023, ஒடிசாவின் ராஜ் பவனில் குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (பி.வி.டி.ஜி) உறுப்பினர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். அதே நாளில், நாடு தழுவிய கருத்தரங்கு மற்றும் மாநாடுகளை நடத்துவதற்கான பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஐஸ்வரிய விஷ்வ வித்யாலயாவின் இந்தாண்டு கருப்பொருளான "நேர்மறையான மாற்றத்தின் ஆண்டு" என்ற கருப்பொருளை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும், தசாபதியா, தமண்டோ, புவனேஸ்வரில் உள்ள அதன் "கலங்கரை விளக்க வளாகத்திற்கு" அடிக்கல் நாட்டுகிறார்.
***
AP/AM/RJ
(रिलीज़ आईडी: 1942428)
आगंतुक पटल : 158