ரெயில்வே அமைச்சகம்

லக்னோவில் ஜெகஜீவன் ஆர்.பி.எஃப் அகாடமியில் புதிதாக கட்டப்பட்ட தேசிய தியாகிகள் நினைவகம் திறந்து வைக்கப்பட்டது

1957 முதல் இன்று வரை வீரமரணம் அடைந்த 1014 ஆர்.பி.எஃப் வீரர்களின் பெயர்கள் நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன

Posted On: 24 JUL 2023 4:40PM by PIB Chennai

லக்னோவில் உள்ள ஜெகஜீவன் ஆர்.பி.எஃப் அகாடமியில் புதிதாக கட்டப்பட்ட தேசிய தியாகிகள் நினைவகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புக்கான தேசிய அருங்காட்சியகத்தை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர்  திரு சஞ்சய் சந்தர் இன்று திறந்து வைத்தார்.

4800 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நினைவிடத்தில், 1957 முதல் இன்று வரை உயிர்நீத்த 1014 ஆர்.பி.எஃப் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு அவர்களுக்கு ஆர்.பி.எஃப் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்கள் ரயில்வே பாதுகாப்பு படையின் வரலாறு, தோற்றம், சாதனைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த முழுமையான கண்ணோட்டத்தை பெறலாம். இந்த அருங்காட்சியகம் மொத்தம் 9000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது, இதில் 37 கருப்பொருள் காட்சி பேனல்கள், 11 காட்சி அலமாரிகள், காவல்துறையின் தகவல்-கிராஃபிக் வரலாறு, 87 கலைப்பொருட்கள், இந்திய தேசிய ஆவணக்காப்பகத்திலிருந்து 500 பக்கங்கள், கடந்த காலத்தைச் சேர்ந்த 36 ஆயுதங்கள், பாதுகாப்பு தொடர்பான 150 ரயில்வே பொருட்கள், ரயில்வே பாதுகாப்புப் படையின் பல்வேறு நிலைகளின் 15 பொம்மைகள்மற்றும் பல முக்கியமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தின் குறிக்கோள் 'அறிவை ஊக்குவிக்கவும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும்' என்பதாகும்.

இது தவிர, புனேவின் கட்கியில் உள்ள மத்திய கவச போர் வாகன கிடங்கிலிருந்து பெறப்பட்டு அகாடமி வளாகம், புதிதாக கட்டப்பட்ட பேட்மிண்டன் மற்றும் புல்வெளி டென்னிஸ் மைதானம், ஆர்.பி.எஃப் சிறப்பு பேண்ட் ஆகியவற்றில் நிறுவப்பட்ட போர் கோப்பை டி -55 டாங்கியையும் ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர்  திறந்து வைத்தார்.

(வெளியீட்டு ஐடி: 1942101)

****
 



(Release ID: 1942280) Visitor Counter : 106