சுரங்கங்கள் அமைச்சகம்

முப்பது முக்கியமான கனிமங்கள் பட்டியல் வெளியீடு


முக்கியமான கனிமங்களை ஆராய்வதில் கவனம் அதிகரிப்பு

Posted On: 24 JUL 2023 2:38PM by PIB Chennai

இந்தியாவுக்கான 30 முக்கியமான கனிமங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  ஆண்டிமனி, பெரிலியம், பிஸ்மத், கோபால்ட், தாமிரம், காலியம், ஜெர்மேனியம், கிராஃபைட், ஹாஃப்னியம், இண்டியம், லித்தியம், மாலிப்டினம், நியோபியம், நிக்கல், பிஜிஇ, பாஸ்பரஸ், பொட்டாஷ், ஆர்.இ.இ, ரேனியம், சிலிக்கான், ஸ்ட்ரோண்டியம், டான்டலம், டெலூரியம், டின், டைட்டானியம், டங்ஸ்டன், வனேடியம் போன்றவை இவை.

இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) மற்றும் பிற முகமைகள் மூலம் நாட்டில் இந்த கனிமங்களை ஆராய்வதில் சுரங்க அமைச்சகம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.  இந்தியாவில் முக்கியமான கனிமங்கள் குறித்து கடந்த 3 ஆண்டுகளில் ஜி.எஸ்.ஐ  ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டது.

லித்தியம், கோபால்ட் மற்றும் பிற போன்ற முக்கியமான தன்மை கொண்ட வெளிநாட்டு கனிம சொத்துக்களை அடையாளம் கண்டு கையகப்படுத்தும் நோக்கத்துடன் தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் , மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி லிமிடெட் ஆகிய மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (கபில்) என்ற கூட்டு முயற்சி நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் கபில் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****



(Release ID: 1942230) Visitor Counter : 143