குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கையால் நெய்யப்பட்ட கதர் தேசிய கொடிகள்

Posted On: 24 JUL 2023 4:18PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகம் 30.12.2021 தேதியிட்ட அரசாணை எண் 02/01/2020- பொது (பகுதி-3) மூலம் இந்திய கொடி குறியீடு 2002-ஐ திருத்தியுள்ளது, இதன் மூலம் "இந்திய தேசியக் கொடி கையால் நெய்யப்பட்டு கையால் நெய்யப்பட்ட அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட, பருத்தி / பாலியஸ்டர் / கம்பளி / பட்டு / கதர் பண்டிங்" ஆகியவற்றால் செய்யப்பட வேண்டும்.

தவிர, அதிகாரப்பூர்வ காட்சிக்கான வழிகாட்டுதல்களின்படி "அதிகாரப்பூர்வ காட்சிக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும், இந்திய தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்) வகுத்துள்ள விவரக்குறிப்புகளுக்கு இணங்கி அவற்றின் நிலையான குறியீட்டைக் கொண்ட கொடி மட்டுமே பயன்படுத்தப்படும்".

ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் இருந்து ஏற்றப்பட்ட தேசியக் கொடி, ஷாஜகான்பூரில் உள்ள ஆயுத ஆடை தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட பட்டு போன்ற கொடியாகும், இது கொடிக் குறியீடுகளுக்கு இணங்க உள்ளது.

பொது / அரசுத் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய தரநிலை -1 (ஐ.எஸ்-ஐ) தேசியக் கொடியைத் தயாரிப்பதற்கான பி.ஐ.எஸ் உரிமத்தை மொத்தம் 04 கதர் நிறுவனங்கள் கொண்டுள்ளன. ஐ.எஸ்.-1 தேசியக் கொடிகளை உற்பத்தி செய்யும் கதர் நிறுவனங்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. கர்நாடக கதர் கிராமோத்யோக் ஸ்மௌக்தா சங்க கூட்டமைப்பு,
  2.  ஹூப்ளி, கர்நாடகா
  3. மத்திய பாரத் கதர் சங்கம், குவாலியர், மத்தியப் பிரதேசம்
  4. காதி டைர்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ், போரிவாலி, மகாராஷ்டிரா
  5. தார்வாட் தாலுகா கரக் ஷத்திரிய சேவா சங்கம், கர்நாடகா

இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

 

ANU/IR/KPG

 



(Release ID: 1942222) Visitor Counter : 89


Read this release in: English , Urdu , Hindi , Telugu