இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபிட் இந்தியா வினாடி வினா 2022 மாநில சுற்று வெற்றியாளர்களுக்கு மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நாளை மும்பையில் பாராட்டு

Posted On: 22 JUL 2023 6:03PM by PIB Chennai

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஜூலை 23, 2023 அன்று மும்பை பாந்த்ராவில் உள்ள பி.கே.சி.யில் 2 வது ஃபிட் இந்தியா வினாடி வினாவில் மாநில சுற்று வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழாவை நடத்துகிறது. இந்த விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து  கொள்கிறார்.

ஃபிட் இந்தியா வினாடி வினா 2022 போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஃபிட் இந்தியா வினாடி வினா என்பது ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாகும், இது 2019 ஆம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால்  தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் இந்தியாவை  ஆரோக்கியமான நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஃபிட் இந்தியா வினாடி வினா 2022 என்பது விளையாட்டு மற்றும் உடற்தகுதி குறித்த இந்தியாவின் மிகப்பெரிய வினாடி வினா ஆகும், இது பள்ளி  மாணவர்களுக்கு ரூ 3.25 கோடி ரொக்கப் பரிசை வழங்குகிறது. பள்ளிகளுக்கான ஃபிட் இந்தியா தேசிய உடற்தகுதி மற்றும் விளையாட்டு வினாடி வினாவின் 2 வது பதிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்  முன்னிலையில், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரால் தொடங்கப்பட்டது. இந்த வினாடி வினா இந்தியாவின் வளமான விளையாட்டு வரலாறு, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பரந்த அளவிலான தலைப்புகளை உள்ளடக்கியது.

***

AD/PKV/DL


(Release ID: 1941772)