வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
டி.பி.ஐ.ஐ.டி மற்றும் குஜராத் அரசு இணைந்து இன்று கார்வி குஜராத் பவனில் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' விளம்பர சுவரை அறிமுகப்படுத்தின
Posted On:
20 JUL 2023 3:08PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) ஒரு முன்முயற்சியான ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ஓடிஓபி) திட்டம், மாநிலத்தின் உள்நாட்டு கைவினைஞர்களை ஊக்குவிப்பதற்காக புதுதில்லியில் குஜராத் அரசுடன் தனது முதல் ஒத்துழைப்பைத் தொடங்கியது. டிபிஐஐடியின் இணைச் செயலாளர் திருமதி மன்மீத் நந்தா மற்றும் குஜராத் அரசின் குடியிருப்பு ஆணையரும் நிதித் துறையின் செயலாளருமான திருமதி ஆர்த்தி கன்வார் ஆகியோர் கூட்டாக இன்று கார்வி குஜராத் பவனில் “ஓரு மாவட்டம், ஒரு தயாரிப்பு” விளம்பர சுவரைத் திறந்து வைத்தனர்.
33 மாவட்டங்களைக் கொண்ட குஜராத் மாநிலம் முழுவதும் பரந்த புவியியல் பரப்பளவு மற்றும் பல்வேறு தயாரிப்புகளுக்கான திறனை எடுத்துக்காட்டுகிறது. “ஓரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” - குஜராத்தில் பாரம்பரிய கைவினைப்பொருட்களான காம்தி பிளாக் பிரிண்ட் மற்றும் மாதா-நி-பச்சேடி முதல் நிலக்கடலை மற்றும் சீரகம் போன்ற விவசாய பொருட்கள் வரை 68 தனித்துவமான தயாரிப்புகளின் வளமான சேகரிப்பு உள்ளது.
ஒரு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பில், குஜராத்தின் தனித்துவமான தயாரிப்புகளின் மேம்பாடு மற்றும் அங்கீகாரத்தை மேம்படுத்தும் வகையில், தயாரிப்பு குறியீடல் மற்றும் தகவல் அட்டைகளை செயல்படுத்த குஜராத் அரசாங்கத்துடன் ஓடிஓபி கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஒத்துழைப்பு நுகர்வோரை விற்பனையகத்தை நோக்கி செல்வதையும், விற்பனையை அதிகரிப்பதையும், தேசிய அளவில் குஜராத்தின் தயாரிப்புகளின் பார்வையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கார்வி குஜராத் பவன் குஜராத் கைவினைப் பொருட்களை சிறப்பாக காட்சிப்படுத்துவதற்காக ஓடிஓபி தயாரிப்புகளை அதன் உட்புறங்களில் ஒருங்கிணைத்துள்ளது.
குஜராத்தில் ஓடிஓபி தலையீடுகள், குறிப்பாக அவற்றின் சந்தை இருப்பை மேம்படுத்த சில தயாரிப்புகளில் கவனம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, சுஜானி கைத்தறி, ஜம்நகரி பந்தினி மற்றும் பதான் படோலா ஆகியவற்றுக்காக அரசாங்க இ-சந்தை (ஜி.இ.எம்) இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, கம்பத் மாவட்டத்தில் உள்ள அகேட் ஸ்டோன் மற்றும் பரூச் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜானி ஆகியோருக்கு தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்ஐடி) பயிலரங்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சீரான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டையும் அதன் மக்களையும் தன்னிறைவு அடையச் செய்வதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்துவதை இந்த ஓ.டி.ஓ.பி முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய நாடு முழுவதும் உள்ள பல்வேறு வகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தனித்துவமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, அடையாளப்படுத்தி விளம்பரப்படுத்துகிறது. இந்த நோக்கத்தை சிறப்பாக அடைய, ஓடிஓபி குழு இந்த திசையில் பணிபுரியும் பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அதிக பார்வையாளர்களை சென்றடைகிறது.
***
(Release ID: 1940983)
LK/IR/KPG/RJ
(Release ID: 1941046)
Visitor Counter : 131