எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

4வது எரிசக்தி மாற்றங்களுக்கான பணிக்குழுவின் கூட்டத்திற்கு இடையே 14வது தூய்மை எரிசக்தி அமைச்சகம் மற்றும் 8வது புத்தாக்க மிஷன் கூட்டம் கோவாவில் தொடங்கியது

Posted On: 20 JUL 2023 10:24AM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், 4வது எரிசக்தி மாற்றங்களுக்கான பணிக்குழு (இடிடபிள்யுஜி) கூட்டம் நேற்று கோவாவில் தொடங்கியது.இந்த  முக்கிய கூட்டத்திற்கு இடையே,  14வது தூய்மை எரிசக்தி அமைச்சகம் மற்றும் 8வது புத்தாக்க இயக்கத்தின்  கூட்டமும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது.  34 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தூய்மை எரிசக்தி கூட்டத்தின் முதல் நாளில், ஒருங்கிணைப்பாளர்கள், சர்வதேச முகமைகள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள்  உட்பட 800க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  கூடுதலாக, இந்த நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட பங்குதாரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 30 பக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த பக்க நிகழ்வுகள் ஆற்றல் திறன், சுத்தமான எரிபொருள், சுத்தமான எரிசக்தி, கரி அமில உமிழ்வு  போன்ற பல்வேறு கருப்பொருள்களில் கவனம் செலுத்துகின்றன.

 இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தூய்மையான எரிசக்தியில் அதிநவீன முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் தொழில்நுட்பம்  குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. ஜூலை 19 முதல்  வரை கோவாவில் உள்ள ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார கண்காட்சியை கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், மின்துறை அமைச்சர் திரு சுதின் தவாலிகர் முன்னிலையில் திறந்து வைத்தார்.மத்திய மின்துறை செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், கூடுதல் செயலாளர் திரு அஜய் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் , மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உலகம் முழுவதிலும் உள்ள மற்ற  தொழில்நுட்பங்கள் இடம்பெறும்.

வணிக வங்கிகள், பலதரப்பு வளர்ச்சி வங்கிகள், அரசுகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட 'கார்பன் வசப்படுத்துதல், பயன்பாடு மற்றும் சேமிப்பு நிதி' என்ற தலைப்பில் விவாதிக்க ஒரு அமர்வுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் முக்கிய கவனம், கார்பன் மேலாண்மை திட்டங்களுக்கு நிதியளிப்பதை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது என்பது குறித்த உத்திகள் மற்றும் யோசனைகளை ஆராய்வதாகும்.

நிகர-பூஜ்ஜிய உமிழ்வைத் தொடர உதவுவதில் கரி அமிலத்தை அகற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களின் சாத்தியக்கூறுகள் முதல் நாள் விவாதத்தின் ஒரு பகுதியாகும். இயற்கை அடிப்படையிலான தீர்வுகள், பல்வேறு அணுகுமுறைகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை பல்வேறு  குழுக்களில் இடம் பெற்றுள்ளோர்  ஆய்வு செய்தனர், மேலும் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான சாத்தியமான ஒருங்கிணைப்புகளையும் அவர்கள்  ஆராய்ந்தனர்.

 ஜூலை 21 ஆம் தேதி அமைச்சர்கள் பங்கேற்கும் முழு அளவிலான கூட்டங்களுக்கு  திட்டமிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில்  ஜி20 எரிசக்தி மாற்றத்திற்கான அமைச்சர்கள் கூட்டம் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும்.

பக்க நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளின் முழு பட்டியலையும் நிகழ்ச்சி நிரலில் காணலாம்.

சிஇஎம் / எம்ஐ-யின் இணையதளத்தை இங்கே அணுகலாம்: https://www.cem-mi-india.org/.

******

(Release ID: 1940909)

LK/PKV/RR


(Release ID: 1940949) Visitor Counter : 142