பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சர் திரு ஜார்ஜ் என்ரிக் தயானாவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் புதுதில்லியில் பேச்சு நடத்தினர்

प्रविष्टि तिथि: 18 JUL 2023 5:31PM by PIB Chennai

பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த புதுதில்லி வந்துள்ள அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சர் திரு ஜார்ஜ் என்ரிக் தயானாவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இன்று (18.07.2023) பேச்சு நடத்தினர். பாதுபாப்பு தொழில்துறை கூட்டாண்மையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் உட்பட பாதுகாப்பு, ஒத்துழைப்பு முன்முயற்சிகள் பற்றி இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

முன்னதாக, அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சர் தேசிய போர் நினைவுச் சின்னத்திற்குப் பயணம் செய்து போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சு நடத்துவதற்கு முன் வருகை தந்துள்ள பிரமுகருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் நான்கு நாள் பயணம் மேற்கொள்ள திரு ஜார்ஜ் என்ரிக் தயானா ஜூலை 17 அன்று புதுதில்லிக்கு வருகை தந்தார். இவருடன் அர்ஜென்டினாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் திரு ஃபிரான்சிஸ்கோ கஃபிரோவும் வந்துள்ளார்.

***

SM/SMB/RJ/KRS

 

(रिलीज़ आईडी: 1940569) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi