உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார் விமான நிலைய வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் உருவச் சிலையைத் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா திறந்து வைத்தார்

Posted On: 18 JUL 2023 3:28PM by PIB Chennai

அந்தமானின் போர்ட்பிளேரில் வீர் சவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

இந்த விமான நிலைய வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் (வீர் சவர்க்கர்) உருவச் சிலையை சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் திரு வி கே சிங், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் திரு டி கே ஜோஷி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு ராஜீவ் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, சிப்பி வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் பகல் நேரத்தின் போது, செயற்கையான ஒளிவிளக்கு வசதி தேவைப்படாது என்றார். இந்த விமான நிலையம் தவிர கூடுதலாக மூன்று விமான நிலையங்களும், நான்கு இடங்களில் நீர்நிலை விமான நிலையங்களும் ரூ.150 கோடி செலவில் மத்திய அரசால் அமைக்கப்பட இருப்பதாக அவர் கூறினார். வரும் நாட்களில் இந்த விமான நிலையம் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் முதலீட்டிற்கு நுழைவாயிலாக இருக்கும் என்று திரு சிந்தியா குறிப்பிட்டார்.

***

AP/SMB/RJ/KPG



(Release ID: 1940505) Visitor Counter : 125