சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜி20 உலக உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளர்கள் மாநாடு புதுதில்லியில் ஜூலை 20, 21-ல் நடைபெறுகிறது; முதன் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது
Posted On:
17 JUL 2023 5:31PM by PIB Chennai
உலக உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளர்கள் மாநாடு புதுதில்லியில் ஜூலை 20, 21-ல் நடைபெறுகிறது. ஜி20ன் ஒரு பகுதியாக இது முதன் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஏற்பாடு செய்த்துள்ளது.
இம்மாநாட்டிற்கான சின்னம் மற்றும் தகவல் புத்தகத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்பி சிங் பாகல் முன்னிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று வெளியிட்டார். இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு வெளியே முதன் முறையாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்களில் உலக உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை மாநாடு கவனம் செலுத்தும். 40 நாடுகளுக்கு மேற்பட்ட உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான தளமாக இம்மாநாடு நடைபெறும். 30 சர்வதேச அமைப்புகள் மற்றும் 25 சர்வதேச ஆராய்ச்சி மையங்கள்/ பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
***
SM/IR/RS/KRS
(Release ID: 1940273)
Visitor Counter : 157