மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

3-வது சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு லாரன்ஸ் வோங் கௌரவித்தனர்

Posted On: 16 JUL 2023 7:47PM by PIB Chennai

3-வது சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தான் போட்டியின் வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி குஜராத்தின் காந்திநகரில் இன்று (16-07-2023) நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களை மத்தியக் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு லாரன்ஸ் வோங் கௌரவித்தனர்.

 

இந்த மூன்றாவது சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் போட்டிக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE), மற்றும் சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU சிங்கப்பூர்) ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான் அறிவுதான் நமது வலிமை என்று கூறினார். சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தான் போன்ற முன்முயற்சிகள், அறிவுப் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்கும், நமது இரு நாட்டு இளைஞர்களின் புத்தாக்கத் திறனை வெளிக்கொணர்வதற்கும் ஒரு அற்புதமான வழியாகும் என்று அவர் தெரிவித்தார். பொதுவான சமூக சவால்களுக்குத் தீர்வு காண, ஹேக்கத்தான் கலாச்சாரத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அறிவு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில், இந்தியாவும் சிங்கப்பூரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பரஸ்பர நன்மைகளை அடைவதற்கும், உலகளாவிய நன்மைகளை ஏற்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளன என்று திரு தர்மேந்திர பிரதான் மேலும் கூறினார்.

 

சிங்கப்பூர் துணைப் பிரதமரும் அந்நாட்டு நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் பேசுகையில், சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் தனித்துவமானது என்று குறிப்பிட்டார். இரு நாட்டுத் தலைவர்களாலும் இது ஊக்குவிக்கப்படுவதாகவும் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் இந்த முன்முயற்சி உருவானது என்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1940014 

***

AP/ PLM /KRS

 



(Release ID: 1940035) Visitor Counter : 115