அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, விண்வெளி ஸ்டார்ட்அப்கள் மற்றும் விண்வெளி தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் ; மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
15 JUL 2023 5:25PM by PIB Chennai
சந்திரயான் -3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படிருப்பது விண்வெளி ஸ்டார்ட்அப்கள் மற்றும் விண்வெளி தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என்று மத்திய அறிவியல் & தொழில்நுட்பம்(தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஜி20 இளம் தொழில்முனைவோர் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், 2020ல் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையை தனியார் பங்கேற்புக்கு அனுமதி அளித்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவின் முதல் தனியார் விக்ரம் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாறு படைத்ததைச் சுட்டிக்காட்டினார். ஜி20 நாடுகளின் இளம் விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்கள், விண்வெளி தொழில்முனைவோரின் புதிய யுகத்தை, கூட்டுப் பணி முறையில், லாபகரமான ஸ்டார்ட்அப் முயற்சிகள் மூலம் விண்வெளி சாத்தியங்களை ஆராயுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்தியா இதுவரை ஏவியுள்ள 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 389 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடந்த 9 ஆண்டுகளில் ஏவப்பட்டவை என்று அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி 2018 முதல் இன்று வரை, கொலம்பியா, ஃபின்லாந்து, இஸ்ரேல், லிதுவேனியா, லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்களைத் தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜப்பான், கொரியக் குடியரசு உள்ளிட்ட முக்கிய ஜி20 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது என ஆவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, விண்வெளி ஆய்வில் இந்தியாவை சமமான பங்காளியாகவும் ஒத்துழைப்பாளராகவும் அமெரிக்கா கருதுகிறது என்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். நாசா இன்று இந்தியாவின் விண்வெளி வீரர்களைக் கோருகிறது, மேலும் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது, இது இந்தியாவின் சிறந்த விண்வெளி பயணத்திற்கு சான்றாகும். எனவே, விண்வெளித் துறையில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பொது-தனியார் பங்கேற்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
நேற்று ஃபிரான்ஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, விண்வெளி, பாதுகாப்பு, சிவில் அணுசக்தி தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் விநியோக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பது குறித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் கலந்துரையாடியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா மற்றும் நம் பிரதமரின் முக்கியத்துவம் உலக அளவில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த நேரத்தில், ஜி20 தலைமைப் பொறுப்பு நாட்டிற்கு இருப்பது மிகவும் பொருத்தமானது. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளதாகவும், அடுத்த 10-15 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நம்புவதாகவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் குறிப்பிட்டார்.
இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், பயிற்சி பெற்ற மனிதவளத்தின் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தியாவில் 1000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா சுமார் 415 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பெருமை பிரதமர் மோடியையே சாரும் என்று அவர் கூறினார்.
***
AP/PKV/DL
(Release ID: 1939812)
Visitor Counter : 232