விண்வெளித்துறை
சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது இந்தியாவின் உள்நாட்டுத் திறன்களை மீண்டும் உறுதிசெய்கிறது, ஆறு தசாப்தங்களுக்கு முன் விக்ரம் சாராபாய் கண்ட கனவை நனவாக்குகிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
14 JUL 2023 6:42PM by PIB Chennai
சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது இந்தியாவின் உள்நாட்டுத் திறன்களை மீண்டும் உறுதிசெய்கிறது, ஆறு தசாப்தங்களுக்கு முன் விக்ரம் சாராபாய் கண்ட கனவை நனவாக்குகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 செலுத்தப்பட்டபின் ஸ்ரீஹரிகோட்டாவில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், விக்ரம் சாராபாய் காலத்தில் வளங்கள் குறைவாக இருந்திருக்கலாம், ஆனால் தன்னம்பிக்கை குறைவாக இல்லை. ஏனெனில் அவர் தன் மீதும் இந்தியாவின் உள்ளார்ந்த திறன் மற்றும் அறிவின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
பிரதமர் மோடியின் மேற்கோளை சுட்டிக்காட்டிய அமைச்சர், “வானம் எல்லை அல்ல” என்றார். பிரதமரின் வார்த்தைகளுக்கு இணங்க, சந்திரயான் -3 இன்று வானத்தின் எல்லையைத் தாண்டி பிரபஞ்சத்தின் ஆராயப்படாத எல்லைகளைக் கண்டறியச் சென்றுள்ளது” என்றும் அவர் கூறினார்.
"இது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் தருணம் என்றும் வரலாற்றை உருவாக்குவதில் ஒரு பகுதியாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் நம் அனைவருக்கும் இது ஒரு சிறப்பான தருணம்" என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
"இந்தியத் தாய், இந்த அமிர்தகாலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் நுழையும் போது, 21 ஆம் நூற்றாண்டில் வளர்ந்து வரும் உலகச் சூழ்நிலையில் உலகளாவிய முன்னணிப் பங்கை வகிப்பதாக அவள் உறுதியளிக்கிறாள்" என்று கூறி டாக்டர் ஜிதேந்திர சிங் பேச்சை நிறைவு செய்தார்.
***
SM/SMB/KRS
(Release ID: 1939605)
Visitor Counter : 171