பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 4,062 காலியிடங்களை நிரப்புவதற்கான இஎம்ஆர்எஸ் பணியாளர் தேர்வு -2023க்கான அறிவிப்பை என்இஎஸ்டிஎஸ் வெளியிடுகிறது

Posted On: 14 JUL 2023 11:56AM by PIB Chennai

மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம்(என்இஎஸ்டிஎஸ்), ஏகலவ்யா மாதிரி பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. என்இஎஸ்டிஎஸ் அண்மையில் 4,062 காலியிடங்களை நிரப்புவதற்கான ஏகலவ்யா மாதிரி பள்ளிகள் பணியாளர் தேர்வு - 2023-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப்பதிவு 30.06.2023 முதல் தொடங்கியது. என்இஎஸ்டிஎஸ் சிபிஎஸ்இ உடன் இணைந்து ஓஎம்ஆர் அடிப்படையில் இத்தேர்வை நடத்துகிறது. ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, தகுதி விபரங்கள், பாடத்திட்டங்கள் போன்ற பிற விபரங்கள்: emrs.tribal.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 31.07.2023 வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

(Release ID: 1939385)

SM/CR/KRS

 

 


(Release ID: 1939579) Visitor Counter : 127