விவசாயத்துறை அமைச்சகம்
உற்பத்தி என்பதற்கும் மேலாக, விளிம்புநிலை விவசாயிகளை ஆதரிப்பது, ஒட்டுமொத்த மதிப்புத் தொடரின் மேம்பாடு ஆகிய லட்சியத்தை நிறுவுதல் மற்றும் அடைவதில் தெளிவான பார்வை வேளாண் உற்பத்தி அமைப்பின் இலக்காக இருக்க வேண்டும்: திரு மனோஜ் அஹுஜா
Posted On:
12 JUL 2023 5:42PM by PIB Chennai
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்புடன் இணைந்து வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் குறித்த ஒரு நாள் தேசியப் பயிலரங்கை இன்று நடத்தியது. இதற்குத் தலைமைவகித்துப் பேசிய செயலாளர் திரு மனோஜ் அஹுஜா, உற்பத்தி என்பதற்கும் மேலாக, விளிம்புநிலை விவசாயிகளை ஆதரிப்பது, ஒட்டுமொத்த மதிப்புத் தொடரின் மேம்பாடு ஆகிய லட்சியத்தை நிறுவுதல் மற்றும் அடைவதில் தலைமை மற்றும் தெளிவான பார்வையின் முக்கிய பங்கு பற்றி பேசினார்.
சிபிபிஓ-களின் ஐஏக்கள் கண்காணிப்பு, அரசு அதிகாரிகளுக்குக் கூருணர்வு அளித்தல், வேளாண் வணிகக் கூட்டமைப்புகளுக்கான உரிமம் மற்றும் வங்கி நிதியைப் பெறுவதில் அரசு முகமைகளின் வசதி ஆகியவற்றின் அவசியத்தைக் கூடுதல் செயலாளர் ஃபைசல் அகமது கித்வாய் வலியுறுத்தினார்.
வேளாண்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் மணீந்தர் கவுர் துவிவேதி இந்தப் பயிலரங்கின் தொழில்நுட்ப அமர்வுகளைத் தொடங்கி வைத்தார். இதில் திட்டத்தின் நிலை மற்றும் முக்கிய குறியீடுகளுக்கான யோசனைகள் பகிரப்பட்டன. சேலம் வீரபாண்டி வட்டாரக் களஞ்சியத்தைச் சேர்ந்த திருமதி பி சிவாராணி மற்றும் க்ருஷி விகாஸ் வக்ராமின் பிரஷிக்ஷன் சன்ஸ்தாவின் ஆஷிஷ் நபாடே ஆகியோர் விவசாயிகளை வெற்றிகரமாகத் திரட்டிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதேபோல் மற்ற பலரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் இயக்குநர்கள் (வேளாண்மை) உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர். திட்டத்தின் முக்கிய செயல்பாட்டு அம்சங்கள் விவாதிக்கப்பட்ட ஒரு திறந்த அமர்வுடன் பயிலரங்கு நிறைவடைந்தது.
***
SM/ SMB /KRS
(Release ID: 1939043)